இவருக்கு இருக்குற பெருந்தன்மை கூட ராஜாவுக்கு இல்லையே!.. ஆனாலும் மலையாளத்தில் இப்படி பண்ணக் கூடாது!..

Published on: July 17, 2024
ilayaraja
---Advertisement---

தமிழ்நாட்டில் தங்கள் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என நினைக்கும் மலையாள சினிமா பிரபலங்கள் தொடர்ந்து தமிழ் பாடல்களை மலையாள படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பிருத்திவிராஜ், நிகிலா விமல் நடித்துள்ள குருவாயூர் அம்பலநடையில் படத்திலும் சூப்பர் ஹிட்டான தமிழ் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் படமே குணா படத்தில் இடம்பெற்ற குணா குகையை மையப்படுத்திய படம் தான். மேலும் குணா படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையமைத்த கண்மணி அன்போடு காதலன் பாடலையும் அப்படியே வைத்திருந்தனர்.

அந்தப் பாடலுக்கு உரிய அனுமதி பெறவில்லை என இளையராஜா தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், அனுமதி பெற்று தான் பாடலைப் பயன்படுத்தினோம் என மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அந்த பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க தற்போது இன்னொரு மலையாள படத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற அழகிய லைலா பாடல் இடம்பெற்று ரசிகர்களை அந்தப் படத்தை பார்க்க தூண்டி வருகிறது.

வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, போர் தொழில் போன்ற பல படங்களில் நடித்த நிகிலா விமல் மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். பிரித்திவிராஜ் மற்றும் பசில் ஜோசப் நடிப்பில் காமெடி கலந்து அட்டகாசமாக சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நிகிலா விமல் பிரித்திவிராஜ் ஜோடியாக நடித்துள்ளார். அவரைக் காட்டும் காட்சியில் தான் அந்த அழகிய லைலா பாடல் இடம்பெறுகிறது.

அந்த போர்ஷனை மட்டும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து நிகிலா விமலின் வெறியர்கள் வைப் ஆகி வருகின்றனர். இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்த சிற்பி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னிடம் அந்த பாடலுக்கான காப்புரிமையை படக்குழுவினர் பெறாமல் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு எதிராக நான் எந்த வழக்கும் தொடரப் போவதில்லை. கிரெடிட்ஸில் என்னுடைய பெயரையாவது பயன்படுத்தினால் போதும் எனக் கூறியுள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.