சிவாஜியைத் திரையுலகிற்கு வரவழைக்க காரணமாக இருந்த நாடகம்... அப்பவே நடிப்புல மாஸ் காட்டியிருக்காரே..!
வாழ்க்கையில் நமக்கு சில நேரங்களில் வரும் திருப்ங்கள் சுவாரசியமானவை. ஒரு சில திருப்பம் நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும் என்று ஒரு கட்டுரையில் எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தார்.
பலருடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற திருப்பங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. அப்படி நடிகர் திலகம் சிவாஜியின் வாழ்விலும் நடந்துள்ளது. அப்படி ஏற்படுத்திய நாடகம் தான் நூர்ஜஹான்.
சிவாஜி 'நூர்ஜஹான்' என்ற நாடகத்தில் நடித்தார். தன்னோட அழகான நடிப்பாலும், நளினமான தோற்றத்தாலும் அன்றைய வாலிபர்களைக் கிறங்கடித்தது. இந்த நாடகத்தில் சிவாஜி நூர்ஜஹான் வேடத்தில் நடித்திருந்தார். அப்போது அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களே இல்லை எனலாம். சிவாஜியின் வாழ்க்கையில் அது ஒரு முக்கியமான நாடகம். சிறந்த நாடகம்.
தமிழ்சினிமா உலகுக்கு சிவாஜிகணேசனை அழைத்து வந்ததும் இந்த நாடகம் தான். இந்த நாடகம் வேலூரில் அரங்கேற்றமானது. நேஷனல் பிக்சர்ஸின் நிறுவனரும், ஏவிஎம் படங்களின் விநியோகஸ்தருமான பி.ஏ.பெருமாள் முதலியார் அந்த நாடகத்தைப் பார்த்தார். அப்போது சிவாஜியின் நடிப்பில் கிறங்கிப் போய் அந்த நாடகத்தைப் பலமுறை பார்த்தாராம்.
தான் எடுக்கும் படத்தில் இவரைத்தான் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் அவர் அதில் இருந்து பின்வாங்கவே இல்லை.
அந்த முடிவுக்குப் பிறகு தான் தமிழ் சினிமா உலகிலே ஒப்பில்லாத நடிகராக தமிழ் சினிமா உலகிற்குக் கிடைத்தார் என்பது அதன் வரலாறு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி 'பராசக்தி' என்ற படத்தில் தான் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே கலைஞரின் வசனத்தில் முத்தாய்ப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்தார்.
69படத்தில் அந்தக் கோர்ட் சீனில் சிவாஜி நடித்ததைப் போல இன்று வரை எந்த நடிகரும் நடிக்க முடியாது என்றே சொல்லலாம்.அன்று முதல் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டார் சிவாஜி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தான் பி.ஏ.பெருமாள் முதலியார்.