அஜித் மாதிரியே சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. கடைசில இப்படி ஆகிப்போச்சே

by ராம் சுதன் |
அஜித் மாதிரியே சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. கடைசில இப்படி ஆகிப்போச்சே
X

நடிகர் சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர் .இந்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பராசக்தி: சுதா கொங்கரா இயக்கத்தில் படம் பெரிய அளவில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பராசக்தி திரைப்படம் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தோடு மோத இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஏற்கனவே விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

விஜய் கொடுத்த துப்பாக்கி: ஆனால் அந்த கேரக்டர் பேசப்படும் அளவு இருந்தது. அதில் ஒரு காட்சியில் விஜய் ‘துப்பாக்கிய புடிங்க சிவா’ என்று கூறுவார். அதற்கு சிவகார்த்திகேயன் இதைவிட ஒரு முக்கியமான வேலையாக நீங்க போறீங்கன்னு தெரியுது. இத நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுவார். இது தற்கால விஜயின் அரசியல் குறித்தும் விஜய்க்கு பிறகு அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிக்கப் போகிறார் என்பதை குறித்தும் உணர்த்தும் டயலாக் ஆக அது விமர்சிக்கப்பட்டது.

ஒரே நாளில் ரிலீஸ்: இந்த நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தோடு எப்படி சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் மோதும் என்ற அளவில் பல கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இப்போது வந்த தகவலின் படி ஜனநாயகன் திரைப்படமும் பராசக்தி திரைப்படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகப்போவதில்லை என்றும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஓடிடிதான் முடிவு செய்யணும்: அந்த படத்தில் இன்னும் 40 சதவீத படப்பிடிப்புகள் இருக்கின்றன. அதை ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய பரபரப்பில் ஏ ஆர் முருகதாஸ் இருக்கிறாராம் .அதேநேரம் பராசக்தி திரைப்படத்தையும் தீபாவளி ரிலீஸுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு முடிவு எடுத்தாலும் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனம் தான் முடிவு செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் பராசக்தி திரைப்படத்திற்கு முன்பே ஏ ஆர் முருகதாஸ் திரைப்படம் தான் முதலில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதே மாதிரியான ஒரு சூழல்தான் விடாமுயற்சிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கும் இருந்தது. ஒரு சமயத்தில் அஜித்தின் இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டது. அதன் பின் விடாமுயற்சி படம் கடந்த 6 ஆம் தேதி ரிலீஸாக குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Next Story