More

அடுத்த கல்யாணத்துக்கு ரெடி… பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கும் விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து, நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படி இருக்கு இவரின் திருமண வாழ்க்கை பல திருப்பங்களை சந்தித்து இருக்கிறது. ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் மன கசப்பால் 2018ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இதை தொடர்ந்து, விஷ்ணு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இணைந்து சுற்றி வந்தார்.

இதற்காக தான் விவகாரத்து செய்தார் என்ற செய்திகள் உலாவிய நிலையில், அவருடன் தனது உறவை உறுதி செய்தார். தொடர்ந்து, கடந்த வருடம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக விஷ்ணு தெரிவித்து இருக்கிறார்.
 

Published by
adminram

Recent Posts