More
Categories: Cinema News latest news

‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு நேர்ந்த கொடுமை! அதோட எஃபக்ட்தான் தங்கலானா? சீறும் சிங்கமாக விக்ரம்

Actor Vikram: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்த வருகிறார். அந்தப் படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. ஏனெனில் இதுவரை விக்ரம் கெரியரில் அவர் போட்டிராத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் தங்கலான் படத்தின் நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்காக தன்னை மிகவும் வருத்தி நடித்த கொண்டிருக்கிறார் விக்ரம். விக்ரம் பொதுவாக தான் நடிக்கும் படங்களில் விதவிதமான கெட்டப்புகளை போட்டுக்கொண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவருபவர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்த திரைப்படம்  ஐ. இந்த படத்திற்கு முன்பே அந்நியன்  திரைப்படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி அடுத்த பட டைட்டிலே இதுதான்!.. அப்போ தான் ஹிட் அடிக்கும்!.. ப்ளூ சட்டை மாறன் நக்கல்!..

அதை எல்லாம் தாண்டி ஐ படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதுவும் விலங்கு உருவத்திலிருந்து அடோனிஸ் உருவமாக மாறுவது மிகவும் குறிப்பிடத்தக்க காட்சியாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் இந்த அளவுக்கு வருத்தி நடித்திருந்தாலும் அந்தப் படத்திற்காக விக்ரமுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.

ஆனால் அந்த நேரத்தில் அனைவரும் ஐ படத்திற்காக நிச்சயமாக விக்ரம் தேசிய விருதை பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்தனர். இதைப்பற்றி ஒரு பிரபல பத்திரிக்கையாளர் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். ஐ படத்தில் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் தேசிய விருது ஜூரியில் இருக்கும் ஒருவரால் தான் இந்த விருது கிடைக்காமல் போனது. இசைத்துறையில் ஒரு பெரிய உயரத்தில் இருக்கும் அவர் தாடி வைத்திருப்பார். அவர்தான் இந்த விருது விக்ரமுக்கு கிடைக்காமல் செய்து விட்டார் எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஓவரா பண்ணுறீங்க ஜீவா… விடாமல் விரட்டும் மனோஜ் மற்றும் ரோகிணி… கொடுப்பீங்களா? மாட்டீங்களா?

அதை தன் மனதில் வைத்துக் கொண்டே விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் எப்படியாவது தேசிய விருதை தட்டி தூக்க வேண்டும் என்ற முழுமூச்சுடன் இறங்கி இருக்கிறார். அதனால் கண்டிப்பாக தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என அந்த பத்திரிக்கையாளர் கூறினார். அந்த பத்திரிக்கையாளர் சொன்னதைப் போல தேசிய விருது தேர்வு குழுவில் உறுப்பினராக இருந்தவர் இசை இயக்குனரான கங்கை அமரன்.

அவர் ஏற்கனவே முன்பு ஒரு பேட்டியில் ஏன் ஐ படத்திற்கு விக்ரமுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் அளித்து இருந்தார் .அவர் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த நேரத்தில் தமிழ் படங்களில் இருந்து ஐ மற்றும் பசங்க 2 இந்த இரண்டு படங்களை தேர்வுக்கு உட்படுத்தி இறுதி கட்ட பரிசீலனைக்கு  கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறியிருந்தார். ஆனால் அந்த குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அதற்கு பதிலடியாக வேற மொழியில் உள்ள இரண்டு படங்களை தேர்வு செய்ததாக கங்கை அமரன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரீ-ரிலீஸாகும் அஜித்தின் 3 படங்கள்!.. தல பிறந்தநாளுக்கு செம ட்ரீட் இருக்கு!.. ரெடியா இருங்க ஃபேன்ஸ்..

Published by
Rohini

Recent Posts