உச்சத்துக்கு போன நடிகைகளை பற்றி இங்கு ஒரு பொதுவான கருத்து இருக்கின்றது. இவ்வளவு தூரம் அந்த நடிகைகள் பெரிய இடத்தை அடைந்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்றுதான் என ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்பது ஆரம்பத்தில் இருந்ததே தவிர சமீப காலமாக அதைப்பற்றி யாருமே பேசுவதில்லை.
அதனால் குறைந்திருருப்பதாகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு சில நடிகைகள் உச்சத்திற்கு சென்றாலும் அதன் பின்னணியில் என்ன மாதிரியான கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். குறிப்பாக அரசியல்வாதிகள் சதி வலையில் சிக்கி அதன் மூலம் பிரபலமான நடிகைகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.
அந்த வகையில் கர்நாடகாவில் இருக்கும் ஒரு அரசியல் பெரும் புள்ளி. அவருக்கு 20 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார். தமிழில் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து வெளியான படத்தில் ஹீரோயினாக நடித்த ஒரு நடிகை. அவருடைய பாதி பெயரில் இன்னொரு நடிகையின் பெயரும் அடங்கும். அந்த நடிகையுடன் இந்த அரசியல் பெரும் புள்ளி ரகசியமாக வாழ்ந்து கொண்டிருந்தார் என்றும் அதனால் அந்த நடிகைக்கு ஒரு குழந்தையும் பிறக்க கடைசியில் அந்த நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதே வரிசையில் தற்போது எதிர்க்கட்சியில் பெரும்புள்ளியாக இருக்கும் ஒரு அரசியல்வாதி. அவர் தென் மாவட்டத்தை சார்ந்தவர். ஒரு காலத்தில் இவர் எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நடிகையுடன் இந்த அரசியல்வாதி உறவு வைத்தார் என்றும் அந்த நடிகைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த திருமண உறவும் முடிந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.
இப்போது அந்த நடிகை இரண்டாவதாக திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். இப்போது அந்த நடிகை குழந்தை கணவன் என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் அறிமுகமான படமே ஒரு கிளுகிளுப்பான படம் தான். இவரும் அந்த அரசியல் பெரும்புள்ளியுடன் தொடர்பு வைத்திருந்தவர். இப்படி நடிகைகளின் வாழ்க்கையில் பல அரசியல்வாதிகள் விளையாடி இருக்கிறார்கள் .அதில் சில கதைகள் மறைக்கப்பட்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
