தமிழக அரசு வைத்த செக்!.. கல்லா கட்டுமா இந்தியன்?!.. டிக்ரெட் ரேட் எவ்வளவு தெரியுமா?..
இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்கள் ஆன நிலையில் இந்தியன் 2 படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் பாடல் சுமாராக இருக்கிறது.
முதல் பாகத்தில் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகளை மட்டும் களையெடுக்கும் இந்தியன் தாத்தா இந்தியன் 2-வில் இந்தியாவில் உள்ள ஊழல்வாதிகளை களையெடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு, இந்தியன் முதல் பாகத்தை விட இந்தியன் 2-வில் இந்தியன் தாத்தா சேனாதிபதிக்கு அதிக சண்டை காட்சிகள் இருக்கிறது.
லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் 2 எடுக்க போய் பல காட்சிகள் எடுக்கப்பட்டு அப்படியே இந்தியன் 3-யையும் முடித்துவிட்டார் ஷங்கர். எனவே, இன்னும் 6 மாதத்தில் இந்தியன் 3 வெளியாகவுள்ளது. நான் இந்தியன் 2 நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே இந்தியன் 3-தான் கமல் சொல்லி இருப்பதால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பொதுவாக அதிக பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டால் முதல் நாள் சில காட்சிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விலை விற்கப்படும். அதற்கு அரசு அனுமதி பெறவேண்டும். ஆந்திராவில் அரசு அனுமதி கொடுத்துவிட்ட நிலையில் தமிழகத்தில் அதிகவிலை விற்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே தியேட்டரில் அதிகவிலையில் டிக்கெட் விற்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, எப்படி கல்லா கட்டுவது என யோசித்த தியேட்டர் அதிபர்கள் எல்லா தியேட்டர்களிலும் ஒரே டிக்கெட், அதன் விலை 190 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளனராம். எனவே, அதற்கு கீழ் எந்த டிக்கெட்டும் கிடையாது என சொல்லப்படுகிறது. அதேநேரம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் இது ஓகே. ஆனால், சின்ன ஊர்களில் இவ்வளவு விலை கொடுத்து மக்கள் பார்ப்பார்களா என்பதுதான் தெரியவில்லை..
எப்படி ஆயினும் படம் நன்றாக வந்திருப்பதால் லைக்காவுக்கு இப்படம் நல்ல வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நாளை இப்படத்தை தனது அரசியல் நண்பர்கள் சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோரோடு பார்க்கவிருக்கிறார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.