1. Home
  2. Latest News

அஜித் கைவிட்டார்!.. பிரதீப்தான் காப்பாற்றினார்!. மேடையில் ஃபீலிங்ஸ் காட்டிய விக்கி!...


Vignesh shivan: தனுஷ் இயக்கிய வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பார் விக்னேஷ் சிவன். அதன்பின் போடா போடி படம் மூலம் இயக்குனராக மாறினார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்த படத்தில்தான் வரலட்சுமி அறிமுகமானார். அதன்பின் சில வருடங்கள் கழித்து அவர் இயக்கிய படம்தான் நானும் ரவுடிதான்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாராவுக்கும் ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் உருவான போதுதான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. படம் உருவான போது பட்ஜெட் அதிகமானதாலும், நயனுடன் விக்கி ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததாலும் கோபப்பட்ட தனுஷ் இதற்கு மேல் நான் பணம் கொடுக்க மாட்டேன் என சொல்லிவிட காதலருக்காக நயனே பணம் கொடுத்து பணத்தை முடிக்க உதவி செய்தார்.

அதன்பின் தனுஷ், விக்னேஷ் சிவனுடனோ, நயனுடனோ பேசுவதில்லை. அதன்பின் ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் துவங்கி படங்களை தயாரிப்பது, புதிய படங்களை வாங்கி வெளியிடுவது போன்ற வேலைகளை இருவரும் செய்து வந்தனர். சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார் விக்னேஷ் சிவன்.


அவை பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால், அவர் சொன்ன கதையில் அஜித்துக்கு திருப்தி ஏற்படவில்லை. அதோடு, அஜித் சொன்ன சில விஷயங்களையும் விக்கி கேட்கவில்லை. இதனால் கடுப்பான அஜித் விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை உள்ளே கொண்டு வந்தார்.

இப்படித்தான் விடாமுயற்சி படம் வெளியானது. அதன்பின் லவ் டுவே பிரதீப்பை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்க துவங்கினார். ஆனால், அந்த படம் பாதியிலேயே நிற்கிறது. அதற்குள் பிரதீப்பின் டிராகன் படம் முடிந்து வருகிற 22ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், டிராகன் பட விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் ‘நான் என்னுடைய கெரியரின் மோசமானதொரு தருணத்தில் இருந்தேன். அப்போது பிரதீப்பை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அவர் உடனே ஓகே சொன்னார். அதனால்தான் எல்.ஐ.கே. படம் சாத்தியமானது. என் வாழ்நாள் முழுவதும் பிரதீப்பு கடமைப்பட்டிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.

அதாவது அஜித் என்னை கழட்டிவிட்டார். பிரதீப் எனக்கு கை கொடுத்தார் என்பதைத்தான் விக்கி இப்படி சொல்லியிருக்கிறார் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்..

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.