விஜயும் அஜித்தும் வாழ்த்து சொன்னார்களா?அப்போ இதெல்லாம் உருட்டா?

சுரேஷ் சந்திரா அறிவிப்பு: நேற்று சோசியல் மீடியாவில் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதாவது விஜய்யும் அஜித்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொன்னார்கள் என சுரேஷ் சந்திரா கூறியதாக ஒரு செய்தி வைரலானது. விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு அஜித் வாழ்த்து சொன்னதாகவும் அஜித்திற்கு பத்ம விருது கிடைத்ததற்கு விஜய் வாழ்த்து சொன்னதாகவும் சுரேஷ் சந்திரா கூறியதாக அந்த தகவல் பரப்பப்பட்டு வந்தது.
எல்லாமே பொய்யா? : ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அப்படியே இருவரும் வாழ்த்து சொன்னார்கள் என்றால் அதை வெளிப்படையாக சொல்லி இருக்கலாமே .அப்படி சொல்லி இருந்தால் வெளியில் அவர்களுடைய ரசிகர்கள் அடித்துக் கொண்டு சாக மாட்டார்கள் இல்லையா? இதை ஏன் வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்கவில்லை.
விடாமுயற்சிக்கு இடையூறு: இன்னொரு பக்கம் அந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது திடீரென சுரேஷ் சந்திரா கூறியதாக இந்த தகவல் வெளியாகிறது என்றால் அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அந்த படத்திற்கு விஜய் ரசிகர்களால் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கூட இப்படி ஒரு செய்தியை பரப்பி இருக்கலாம்.
விஜய் ரசிகர்களை ஆஃப் செய்ய: பெரும்பாலும் விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது அஜித் ரசிகர்கள் செய்யும் சம்பவம், அஜித் படம் ரிலீஸ் ஆகும்போது விஜய் ரசிகர்கள் செய்யும் சம்பவம் என இணையமே தள்ளாடி போய்விடும். அப்படி இருக்கும் பொழுது விடாமுயற்சி திரைப்படத்திற்கு அந்த மாதிரி எந்த ஒரு இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கூட இந்த மாதிரி ஒரு செய்தியை பரப்பி விஜய் ரசிகர்களை ஆஃப் செய்யும் பட்சத்தில் இது நடந்திருக்கலாம் என தெரிகிறது.
விஜய்யும் அஜித்தும் நண்பர்களாகி விட்டார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் அமைதியாவார்கள் இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களும் அமைதியாவார்கள் என்று தான் இந்த செய்தி பரப்பப்பட்டிருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். இவர் சொல்வதைப் போல விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் யாருக்கு பிறந்த நாளாக இருந்தாலும் அதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உடனே பதிவிட்டு விடுகிறார்.
அப்படி இருக்கும் பொழுது 30 வருடங்களாக சினிமா துறையில் நண்பராகவும் தொழில் முனையில் போட்டியாளராகவும் இருக்கும் அஜித்திற்கு மட்டும் ஏன் தன்னுடைய வாழ்த்தை அவர் இணையதள பக்கத்தில் வெளியிடவில்லை. அதுதான் அனைவரின் சந்தேகமாகவும் இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது எப்படி இருவரும் பர்சனல் ஆக பேசிக் கொண்டார்கள். அதனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்று தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.