Cinema News
விஜய் காசு கொடுக்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா?.. டெரர் மோடுக்குப் போன புஸ்ஸி ஆனந்த்!..
நடிகர் விஜய் காசு தரவில்லை என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் கொந்தளித்து பேசியுள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிகர் விஜய் நடித்த வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் அந்தப் படத்திற்கான பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவதாக ஒரு பாடல் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.
அந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடி இருப்பதாகவும் கங்கை அமரன் அதற்கு பாடல் வரிகளை எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தாறுமாறாக இசையமைத்து வருவதாக சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் இன்னொரு பக்கம் அரசியலில் பெரும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடத்தி இருந்தார்.
வைர நெக்லஸ், வைர மோதிரங்கள் என தனது சொந்தக் காசை செலவழித்து விஜய் உதவி வருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜயின் விலையில்லா வீடுகள் திட்டத்திற்கு வழங்கப்படும் வீடுகள் ரசிகர்களிடம் வசூல் செய்யும் தொகையை வைத்து கட்டப்படுகிறதா என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
செய்தியாளர் சந்திப்பின் போது அது தொடர்பான கேள்விக்கு கடுப்பான பிஸியான தளபதி விஜய் இதற்கெல்லாம் காசு தரவில்லை என உனக்குத் தெரியுமா? என பதிலுக்கு கேட்க ஆரம்பித்து கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வீடியோவை ஷேர் செய்து விலையில்லா வீடுகள் கட்டுவதற்கு நடிகர் விஜய் தான் காசு கொடுக்கிறார் என தளபதி ரசிகர்கள் தண்டோரா போட ஆரம்பித்து விட்டனர். விஜய் கட்டித் தரும் வீடுகளின் தரம் சரியாக இல்லை என்றும் இதற்கு முன்னதாக கடுமையான விமர்சனங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.