அஜித்துடன் நடிக்க வேண்டியது மிஸ் ஆயிடுச்சி!.. ஹைப் ஏத்தும் விஜய் சேதுபதி!...

Vijay sethupathi: ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் இவர்களெல்லாம் பல நடிகர்களுக்கே பிடித்த நடிகர்களாக இருப்பவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும். ரஜினி என்றால் அவரின் ஸ்டைல், கமலுக்கு அவரின் நடிப்பு, விஜயகாந்துக்கு ஆக்சன் காட்சிகள், அஜித்துக்கும் அவரின் தோற்றம், விஜய்க்கு நடனம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையை கொண்டவர்கள்.
ரஜினி கமல்: ரஜினி, கமலுக்கு பின்னால் வந்தவர்கள் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள். சூர்யா, விக்ரம், விஜய், அஜித் போன்றவர்கள் ரஜினி, கமலின் ரசிகர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் வந்த இளம் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களாக இருக்கிறார்கள். 80களில் ஹீரோக்கள் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயாராகவே இருந்தார்கள்.
80களில் ரஜினி கூட சில நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சனோடு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் ஒரு கட்டத்தில் மற்றவர்களுடன் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டார். விஜய் கூட சூர்யாவோடு நேருக்கு நேர் மற்றும் ஃபிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி: பீட்சா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விஜய் சேதுபதி மற்ற நடிகர்களை போல் இல்லாமல் அவருக்கு பிடிக்கும் வேடங்களில் நடித்து வருபவர். கதையின் நாயகன், துணை கதாபாத்திரம், வில்லன், கேமியோ என எல்லா வேடத்திலும் நடிக்கும் நடிகர் இவர்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். அதேபோல், விக்ரம் படத்தில் கமலுக்கே வில்லனாக நடித்து அசத்தினார். இந்த 2 படங்களிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு வேறலெவலில் இருந்தது. மேலும், அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்திலும் வில்லன் இவர்தான். இந்த படம் 1300 கோடி வசூல் செய்தது.
அஜித்துடன் ஒரு படம்: ஒருவிழாவில் கலந்து கொண்ட அவரிடம் ‘விஜயுடன் நடித்த நீங்கள் எப்போது அஜித்துடன் நடிக்க போகிறீர்கள்?’ என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் ‘பல இடத்திலும் இந்த கேள்வியை கேட்கிறார்கள். ஒரு படத்தில் அவருடன் நடிப்பதாக இருந்து மிஸ் ஆகிவிட்டது. கண்டிப்பாக அவருடன் நடிப்பேன்’ என கூறியிருக்கிறார்.