விஜயால இவருடைய பாதி வாழ்க்கையே போயிருச்சே... புலம்பும் நடிகர்

சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருந்து கொண்டு வருகின்றது. அதிலும் இளம் தலைமுறை நடிகர்கள் தான் ஒரு வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்கிற ஒரு வைராக்கியம் அவர்களிடம் இருக்கின்றது. அந்த வகையில் விஜய்யும் அப்படித்தான்.
தான் ஒரு புகழ்பெற்ற இயக்குனர் மகன் என்றாலும் தனக்கென ஒரு இமேஜை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என இத்தனை வருட காலம் போராடி தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக வந்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய தம்பி என்ற பெயரில் சினிமாவிற்குள் வந்தவர் தான் நடிகர் விக்ராந்த்.
அவர் விஜயின் சித்தி மகன். அச்சு அசல் தோற்றத்தில் விஜய் போலவே தான் இருப்பார். ஆனால் விஜய் அளவுக்கு அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. இதற்குக் காரணம் விஜய் தான் என ஒரு பேட்டியில் விக்ராந்த் கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும் போது கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக தான் விஜய் அண்ணாவ பத்தி யாரும் கேட்கிறது இல்லை.
அதற்கு முன்பு வரை அவருடைய தம்பி என்ற ஒரு இமேஜ் தான் என்னிடம் இருந்தது. அதுவும் எனக்கு வாய்ப்பு கொடுக்க வரும் இயக்குனர்கள் கூடவே இந்த படத்தில் விஜய்யை ஒரு ரோலுக்கு நடிக்க சொல்லுங்கள், விஜயை ஒரு ட்வீட் போட சொல்லுங்கள், விஜயிடம் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து தாருங்கள் என விஜய் அண்ணாவைப் பற்றியே தான் என்னிடம் பேசுவார்கள்.
இதனாலையே பல நல்ல நல்ல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை நான் இழந்தேன். ஆனால் இதைப் பற்றி நான் அண்ணா கிட்ட எதுவும் கேட்டதும் கிடையாது என கூறி இருக்கிறார் விக்ராந்த். விக்ராந்தை பொறுத்தவரைக்கும் ஒரு சிறந்த நடிகர். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். பல படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.