More

அவங்க முகத்துல எவ்ளோவ் சந்தோஷம் பாருங்க… BMW கார் வாங்கிய மணிமேகலை!

பிரபல தொகுப்பாளினியாக மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார். பெற்றோர்களை எதிர்த்து காதலித்தவரையே கரம்பிடித்த மணிமேகலைக்கு திருமணத்திற்கு பின்னர் அதிர்ஷம் அள்ளஅள்ள குறையாமல் கிடைத்து வருகிறது. 

Advertising
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் தங்களது காதல் திருமணத்தை குறித்தும் வாழ்க்கையில் முன்னேற போராடும் முயற்சியை குறித்தும் கண்கலங்க பேசி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

அந்த நிகழ்ச்சியை அடுத்து அதே விஜய் தொலைக்காட்சி அவரை குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது. அதில் அனைவரையும் மகிழ்வித்து மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்த மணிமேகலை வாழ்க்கையிலும் ஒரு நல்ல நிலையை அடைந்துவிட்டார். ஆம், ஷிவானி, தாடி பாலாஜியை தொடர்ந்து மணிமேகலையும் BMW கார் வாங்கி தனது கனவை அடைந்துள்ளார். அந்த காரின் மதிப்பு ரூ. 43 லட்சத்து 58 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
adminram

Recent Posts