அந்த நடிகர் சாப்பிட்டாருன்னா தட்டையே கழுவ வேண்டாமாம்... கமல் அசைவத்தை விட்டுவிட்டாரா..? ரஜினி எப்படி?

by ராம் சுதன் |

நடிகர்கள், நடிகைகள் எப்படி எப்படி சாப்பிடுவாங்கன்னு நளபாகத்தில் உள்ள அண்ணாச்சி ஏ.எம்.ராதாகிருஷ்ணன் சுவையான சில தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

சத்யராஜ் சாப்பிட்டா தட்டையே கழுவ வேண்டாம். அவ்வளவு சுத்தமா சாப்பிடுவாரு. ரொம்ப உணவு விஷயங்களை ரசிச்சி சாப்பிடுவாரு. அவருக்கு பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ தட்டுல ஒண்ணுமே இருக்காது.

இவ்வளவுக்கும் அவர் பிறப்புலயே வசதியான குடும்பம். உணவை எங்கயுமே வேஸ்ட் பண்ண மாட்டாரு. நைட் நாங்க கேரியரைக் கொடுத்து சில ஆர்டிஸ்டுகளோட கேரியரை செக் பண்ணுவோம். சாப்பிட்டாங்களான்னு பார்ப்போம். அவங்களுக்கு எது எது பிடிச்சிருக்குன்னு பார்ப்போம். பிரபு சார் அப்படித்தான். அவரும் சாப்பாட்டுப் பிரியர். அதுல குறை சொல்ல மாட்டார்.

மட்டன்ல குடல் கறி, தலைக்கறி, நண்டுன்னா அவ்வளவு விரும்பி சாப்பிடுவாரு. ஐயான்னு தான் சொல்வாரு. பெரிய ஆர்டிஸ்ட், பெரிய டைரக்டர், ஹீரோ, ஹீரோயின் யாரும் பெரும்பாலும் சாப்பாட்டைக் குறை சொல்றது இல்ல. ஆனா 15 நாளா ஆச்சுன்னா அவங்களுக்கும் டெய்லி இட்லி வைக்கும்போது போரடிக்கத் தானே செய்யும்.

அப்போ அவங்க 'என்னய்யா இதே இட்லி, இதே பொங்கல், இதே வடை'ன்னு சலிப்பு வரும். அந்த நேரத்துல தான் நாங்க குதிரைவாலி, ராகி தோசை எல்லாம் கொடுப்போம். அப்போ இட்லி, பொங்கலை விட்டுட்டு பெரிய ஆர்டிஸ்டே தோசைக்கல் பக்கம் வந்துடுவாங்க. நானே வருவேன் ஊட்டில சூட்டிங். தனுஷ் நேரா தோசைக்கல்லுக்கே வந்துடுவாரு. இந்த முட்டையை அதுல போட்டுக்கொடு. தோசைல ஊத்திக் கொடுன்னு சொல்வாரு.

ரஜினிகாந்த் நான் வெஜ்ஜை விரும்பி சாப்பிடுவாரு. அப்போ பிராய்லர் பெரிசா புழக்கத்துக்கு வராத காலம். நாட்டுக்கோழி நிறைய கிடைக்கும். காட்டு முயல் எல்லாம் விரும்பி சாப்பிடுவாரு. இப்போ நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திக்கிட்டாரு. உலகநாயகனும் நான் வெஜ் சாப்பிடுறதை குறைச்சிக்கிட்டதா கேள்வி. அவருக்கும் சமைச்சுக் கொடுக்கல.

வந்த வாய்ப்புகள் அப்படி. வேற எங்காவது அப்போ இருக்கும்போது வர முடியாத சூழல். ரெண்டு படம் மூணு படம் வெளியூர். அங்கே போயிட்டேன்னா சென்னையில வேலை பண்ண மாட்டேன். எல்லா இடத்துலயும் போய் அங்கங்கே நிற்க வேண்டிய சூழல். உலகநாயகனுக்குப் பண்ணல. பண்ணுவேன்னு நினைக்கிறேன் விரைவில். செஞ்சா அதுல ஒரு மகிழ்ச்சி.

நடிகைகளைப் பொருத்தவரை உணவு விஷயத்தில் பெரிதாக விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பயறு, வேக வைத்த முட்டை, ஆஃபாயில் தான். அதுல அப்படி என்ன தான் இருக்கோ தெரியல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story