இந்தியன் தாத்தாவிடம் சித்தார்த் கேட்ட கேள்வி... அங்க தான் நிக்குது படம்... பயில்வான் ரிவியூ

by ராம் சுதன் |

இந்தியன் 2 படம் ரொம்ப எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தைத் தந்து இருக்கிறது என்று கலவையான விமர்சனங்கள் வருகிறது. இருந்தாலும் இந்தியன் 3 ல் தான் படத்தின் மொத்த கருத்தும் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே இந்தியன் 2 படம் வந்துள்ளதாம். படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

ஒவ்வொரு தனிநபரும் திருந்தும்போதும், தன் வீட்டைச் சுத்தம் செய்யும்போதும் நாடு நலம்பெறும் என்ற ஒற்றை வரி தான் கதை. விஜய் மல்லையாவில் கதை ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் திருந்த வேண்டும். வீட்டைத் திருத்த வேண்டும் என்று சொல்கிறது படம். பிரபல யூடியூபர்களாக வலம் வருகின்றனர் சித்தார்த் குழுவினர்.

கமல் மட்டும் ஹாலிவுட்டில் பிறந்தால் அவரை அந்த ஹாலிவுட்டே கொண்டாடியிருக்கும். எந்த ஒப்பனையாக இருந்தாலும் அழகாகப் பொருந்துகிறது. எத்தனை பேர் வந்தாலும் அந்த வர்மக்கலையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். சண்டைக்காட்சிகள் எல்லாம் வேற ரகம். சமுத்திரக்கனி பிரமாதமாக நடித்துள்ளார். அப்பா, மகன் பாசத்தை பல நேரங்களில் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் வரும் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடி கிடையாது. ரகுல் ப்ரீத்தி சிங் சித்தார்த்தை லவ் பண்ணுகிறார். 'நீ மட்டும் திருந்திட்டா இந்த உலகம் திருந்திடுமோ' என கேள்வி கேட்கிறார்.

கடைசியில் சித்தார்த் கேட்கும் கேள்வியில் எழுந்து உட்காரச் செய்கிறது. 'வீட்டில் நிம்மதி இல்லை. அப்படி இருக்கும் போது வீட்டைத் திருத்துவது எப்படி'ன்னு இந்தியன் தாத்தாவிடம் கேட்கிறார். ஒரு நல்ல நகைச்சுவை நடிகனை இழந்து விட்டோமே என யோசிக்கும் வகையில் விவேக் நம்மை சிரிக்க வைக்கிறார்.அப்படித்தான் மனோபாலாவும்.

படத்துல செட்டிங் எல்லாமே சூப்பர். ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஓவியத்தைப் போலவே தீட்டியுள்ளார். அனிருத் இசை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைல். காசு வாங்கி ஓட்டுப்போடுவதால் நாம் நல்லவங்களைத் தேர்ந்தெடுக்கவே முடியாது. அதிகாரத்திற்கு வந்ததும் எல்லாருமே தவறு செய்யத் தான் செய்வார். ஊழலை ஒழிக்க முடியாது என்பது தான் படத்தின் கருத்து.

ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் இல்லை. இந்தியன் 2ஐ விட இந்தியன் 3 பிரமாதமா இருக்கு. அடுத்த பாகம் இளைஞர் கமல், எஸ்.ஜே.சூர்யாவைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story