வாயில சிகரெட்டுடன் சூர்யா!.. எப்படி கவனிக்காம விட்டாரு அந்த பிரபலம்?.. பஞ்சாயத்து கிளம்பலயா?!.
நேற்று சூர்யாவின் பிறந்தநாள். அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தார்களாம். அதுவும் 6000 பேர் கொடுத்தது வரவேற்கக் கூடிய விஷயம். ஆனால் நேற்று சர்ச்சையான ஒரு விஷயமும் நடந்துள்ளது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவரது 44 படத்துல கிளிம்ப்ஸ் ஒண்ணு வெளியானது. அதுல அவர் சிகரெட் பிடித்துவிட்டு அப்படியே நடந்து வர்றாரு. அவரு கையில கன்னை வச்சிருக்காரு. அது ஒரே ஷாட்ல எடுத்துருக்காங்க. ஒரு கிளிம்ப்ஸ் வந்தது. அப்படி ர்யா நச்சது சரியா, தவறான்னு விவாதம் கிளம்பியிருக்கு.
நல்லவேளை அன்புமணி ராமதாஸ் இந்த சர்ச்சையை கையில எடுக்கல. ஜெய்பீம் படத்துக்கு ஏற்கனவே பிரச்சனை வந்தது. அதுல பாமகவினரை இழிவு படுத்தியதாக மிகப்பிரச்சனை வந்தது. நல்லவேளையா அது ஓடிடில வந்தது. சிவக்குமார் சார் குடும்பம்னா மரியாதையா பார்ப்பாங்க.
பெரும்பாலும் சில்லரைத்தனமான வேலையில ஈடுபட மாட்டாங்க. அப்படிப்பட்ட குடும்பத்தில இருந்து இப்படி ஒரு கிளிம்ப்ஸை வெளியிடணுமான்னு ஒரு மிகப்பெரிய கேள்வியா இருக்கு.
சூர்யாவை அழைத்து ஏவிஎம்.சரவணன் பேரழகன் படத்தின்போது அவரது அப்பா சிவக்குமாரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னாராம். அதற்கு அவரும் சரி என்று சொல்லிவிட்டு அவரைக் கையெடுத்துக் கும்பிட்டாராம்.
அப்படிப்பட்ட சூர்யாவின் சில படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட சூர்யாவை ரோலக்ஸாக மாற்றி கெடுத்தவர் லோகேஷ் கனகராஜ் தான். அதற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து நமக்குக் கிடைக்கணும்னு சூர்யா நினைக்கிறாரா?
அதனால் தான் இந்த கிளிம்ப்ஸாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே பாபா படத்தில் ரஜினி புகைபிடித்ததை கடுமையாக விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினியும் தனது படங்களில் புகைபிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சூர்யா விஷயத்தில் அவர் எப்படி கவனிக்காமல் விட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.