விஜயை ஜெமினிகணேசனாக மாற்றிய தொழில்நுட்பம்..! காமெடியாகிப் போன வெங்கட்பிரபு பிளான்..!

by ராம் சுதன் |

கோட் படத்தின் 3வது சிங்கிள் வந்ததில் இருந்து விஜயின் தோற்றம் பற்றி விவாதங்கள் சமூகவலை தளங்களில் வந்து கொண்டுள்ளது. 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்'னு யுவனின் இசையில் இந்த 3வது சிங்கிள் வந்தது. இந்தப் பாடலுக்கு விஜய் இளம் வயது தோற்றத்தில் அட்டகாசமாக ஆடி இருப்பார்.

டீஏஜிங் பண்ணின விஜய் இப்படி இருக்காரேன்னு பல பேர் சொல்றாங்க. உள்ளபடியே விஜயை அழகா ஷேவ் பண்ணிட்டு லைட்டா டிஜிட்டல் ஒர்க் பண்ணினாலே விஜய் டீஏஜிங் பண்ணப்பட்ட விஜயாகத் தான் இருப்பார் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன். இவர் இதுகுறித்து மேலும் என்னென்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

இன்னைக்கும் வந்து அவருக்கு வயசு தெரியவே இல்ல. ரொம்ப இளமையாகத் தான் இருக்காரு. ஆனால் இந்த டீஏஜிங் அப்படிங்கறது ஏதோ ஒரு பர்பஸ்... கூட அவரோட நடிக்கிற பிரசாந்த், பிரபுதேவான்னு இவங்க எல்லாரையும் வந்து அவங்க டீஏஜிங் பண்ண வேண்டிய சூழல்ல இருக்கறதனால இவரையும் சேர்த்துப் பண்ணியிருக்காங்க. அதுல இந்த மீசை வந்து அவருக்கு ஜெமினிகணேசன் மீசை மாதிரி வச்சிட்டாங்க. அதுவந்து அந்த முகத்தை இன்னும் கொஞ்சம் கூர்மையாகக் காமிச்சிருக்கு.

முகத்தையே ஒரு மாதிரி வசீகரா படத்து ஸ்டைல்ல வச்சிருக்காரு. அந்தப் படத்துல அவரு பின்னிப் பெடல் எடுத்துருப்பாரு. அப்போ அந்தப் படம் ஓடலைன்னாலும் கூட இப்பப் பார்த்தீங்கன்னா ரொம்ப ரொம்ப ரசிக்கலாம். அந்த அளவுக்கு இந்தப் படத்துல காமெடி பண்ணிருப்பாரு போல இருக்கு. அதனோட வெளிப்பாடா கூட விஜயோட இந்த தோற்றம் இருக்கலாம்.

அதனால ஒரு கூட்டம் ஐயய்யோ விஜயை இப்படி பண்ணிட்டீங்களேன்னு சொல்றாங்க. ஆனா படத்துல நல்லா வரும். லியோ படத்துல கூட விஜயோட தோற்றத்தை தேங்காய் நாரை வச்சி ஒரு விக் பண்ணிருக்கீங்களே... இது தேவையான்னு கேட்டாங்க. ஆனா படம் வரும்போது அது படத்தோட பொருந்தி ஓடிடுச்சு. கிட்டத்தட்ட இந்த வடிவமைப்பும் அப்படித்தான் வரும்னு நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோட் படத்தில் விஜய்க்கு டீஏஜிங் செய்ய வேண்டும் என்றும் அந்தக் காட்சிக்கு அது அவசியம் என்றும் திட்டமிட்டது படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story