விஜயகாந்துக்கு புரட்சிக்கலைஞர் பட்டம் வந்தது இப்படி தான்...! அட அவரா கொடுத்தாரு?

விஜயகாந்துக்கு 'கேப்டன்'னு ஒரு பேரு உண்டு. அது கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சதுக்குப் பிறகு பிக்கப் ஆச்சு. அதே மாதிரி புரட்சிக்கலைஞர்னு ஒரு பட்டம் இருக்கு. அதை யார் கொடுத்தாங்கன்னு பார்க்கலாமா...

இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு சொல்கிறார்.

கூலிக்காரன் படத்துல தான் 'புரட்சிக்கலைஞர்'னு பட்டம் போட்டோம். படத்தைப் பார்த்து ரஜினியே அசந்துட்டாரு. மணலியில் சின்ன சேக்காருன்ற கிராமத்துல ரஜினிகாந்த் சாரோட மன்ற விழா நடக்குது. கல்யாண விழா.

நான், விஜயகாந்த், வசந்தன்... விஜயகாந்த் ஆபீஸ்ல ரசிகர் மன்றத்தவர்... போறோம். வண்டியில ஏறும்போதே டைட்டில் சொல்லணும்னு இருக்கும்போது நான் சொல்றேன். புரட்சி நடிகர், நடிகர் திலகம் இருக்காரு.

கலைஞர்னா கலைஞர் பாசம். புரட்சிக்கலைஞர்னு சொல்றேன். ராவுத்தர் சூப்பரா இருக்குன்னுட்டாரு. இந்தப் படத்துக்கு அப்புறம் அடுத்தப் படத்துக்கு உடனே ராவுத்தர் கூப்பிட்டாரு. விஜயகாந்தும் அவரும் ஃபைனல் பேமண்டைக் கொடுக்கும் போது திருப்பிக் கொடுக்குறாங்க.

'வருஷத்துக்கு ஒரு படம் நீங்க பண்ணுங்க. வெளியில யாருக்கிட்டயும் போய் டேட் கேக்காதீங்க. நாங்களே வருஷத்துக்கு ஒரு படம் பண்றோம்'னு சொன்னாங்க. நல்லவன் படத்துக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கறாங்க. ராதாரவி எல்லாம் கூலிக்காரன் படத்துல நல்ல நடிச்சிருந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கமல், ரஜினி என இருபெரும் ஜாம்பவான்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ராஜசேகர். அவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் தான் கூலிக்காரன். இந்தப் படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு. விஜயகாந்த், ரூபினி, ஜெய்சங்கர், பாண்டியன், ராதாரவி, நாகேஷ், எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ராஜேந்தர். குத்து விளக்காக குலமகளாக, வச்ககுறி தப்பாது, போதை ஏற்றும் நேரம், வாழ்க்கை ஒரு, தொட்டதும் துவண்டிடும், பாடும் வயிறு தான் ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படம் விஜயகாந்துக்கு மாபெரும் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

Related Articles
Next Story
Share it