தனுஷ், சிம்பு, சூர்யாவை ஓவர்டேக் பண்ணிய நடிகர் யார் தெரியுமா? அட அவரா..?
தமிழ்ப்பட உலகில் உச்சநட்சத்திரங்களின் வரிசையில் அவ்வப்போது மாறுதல் வந்த வண்ணம் உள்ளது. ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்குப் பிறகு விஜயகாந்த் வந்தார். அவர் பாக்கியராஜ், சத்யராஜ், கார்த்திக், மோகன், ராமராஜன் என பலரையும் ஓவர்டேக் செய்தார்.
அதே போல தற்போது விஜய், அஜீத்துக்குப் பிறகு யார் என திரையுலகில் வரிசைப்படுத்துவதில் சிக்கல் வந்துள்ளது. இந்த சிக்கலைத் தீர்த்து வைக்கும் விதத்தில் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்து இருந்தார்.
அதன் எதிரொலியாக பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனல் ஒன்றில் இப்படி பதில் அளித்துள்ளார். அவற்றில் ஒரு கேள்வி தான் தலைப்பு சம்பந்தப்பட்டது. வாங்க என்னன்னு பார்க்கலாம்.
சமீபத்தில் தமிழ்த்திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் விஜய், அஜீத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான் இருக்காருன்னு சொல்லிருக்காரு. அப்படின்னா தனுஷ், சிம்பு, சூர்யாவை எல்லாம் ஓவர்டேக் பண்ணிட்டாரான்னு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்னது இதுதான். விஜய், அஜித்துக்குப் பிறகு இன்றைக்கும் திரையரங்குக்கு வந்து பார்க்கிற ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனுக்குத் தான் மிகப்பெரிய செல்வாக்கு இருக்குன்னு திருப்பூர் சுப்பிரமணியம் சொல்லி இருக்காருன்னா அதுக்கு அதுதானே அர்த்தம்னு பதில் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் அயலான் உள்பட பல படங்கள் பிளாப் என்றாலும் அவருக்குத் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்பது ஆச்சரியமாகவே உள்ளது. அவர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் அமரன். இது உலகநாயகன் கமலின் சொந்தப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷூக்கு கடைசியாக ராயன் படம் வெளியானது. சிம்புவுக்கு விரைவில் கமலுடன் தக் லைஃப் படம் வெளியாக உள்ளது. அதே போல சூர்யாவுக்கு கங்குவா படமும் வாடிவாசல் படமும் வெளிவர உள்ளது.
அது மட்டுமல்லாமல் தளபதி விஜய் தனக்கு 69வது படம் தான் தனது கடைசி என்று சொல்லி விட்டார். இதனால் வரும் காலங்களில் 3வது இடத்திற்கு மட்டுமல்லாமல் 2வது இடத்திற்கும் கடும்போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.