×

பணம் கொடுத்தா கல்யாணத்தையே நிறுத்திடுறேன்... வெளிநாட்டுப் பெண்ணை வலையில் வீழ்த்திய நடிகர்

தமிழில் லவ்வர் பாயாகச் சுற்றிய அந்த நடிகர் வெளிநாட்டுப் பெண் ஒருவரை ஏமாற்றி வில்லங்க சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். நாற்பதுகளைத் தொடும் அந்த நடிகர் ஒருகாலத்தில் காமெடி நடிகருடன் இணைந்து கோலிவுட்டைக் கலக்கினார். 
 
 
பணம் கொடுத்தா கல்யாணத்தையே நிறுத்திடுறேன்... வெளிநாட்டுப் பெண்ணை வலையில் வீழ்த்திய நடிகர்

காமெடி அவர்கள் இருவரையும் வெற்றிகரமாக ஒரு ரவுண்ட் அழைத்துச் சென்றது. ஆனால், அந்த காமெடியே எத்தனை நாளைக்குத்தான் வொர்க் அவுட் ஆகும். அதனால், காமெடி தனி ஹீரோவாக நடிக்கத் தொடங்க, நம்ம ஹீரோவுக்கு வாய்ப்புகள் குறைந்தது. நடித்த ஒன்றிரண்டு படங்களும் சரியாகப் போகாததால், கடன் கழுத்தை நெறித்தது. அதைத் தீர்ப்பதற்காக இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதுவிதமான ஒரு நிகழ்ச்சியை டிவியில் நடத்தினார் நடிகர். 

ஆனால், அந்த நிகழ்ச்சியில் கொடுத்த உறுதிமொழியை அவர் காப்பாற்றவில்லை என்பது தனிக்கதை. இதனிடையே ஒரு படத்தில் சேர்ந்து நடித்த பஞ்சாபி நடிகையுடன் லவ்வாகி, அடம்பிடித்து அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். ஆனால், கூடவே இன்னோரு டிராக்கையும் தலைவர் ஓட்டியிருக்கிறார் என்பது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

வெளிநாட்டில் செட்டிலாகியிருக்கும் ஒரு பெண்ணிடம் டிவி நிகழ்ச்சி நடத்திய காலத்திலிருந்தே பேசி காதல் வளர்த்திருக்கிறார் ஹீரோ. `சத்தியமா உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்’ என ஹீரோ சொன்ன வார்த்தையை நம்பி வெளிநாட்டுப் பணத்தை வாரி இறைத்திருக்கிறார். இடையில் நடிகையுடன் கல்யாணம் பற்றி கேட்டபோது அது வீட்டில் இருப்பவர்களின் முடிவு. எனக்கு கடன் அதிகமா இருக்கு. கடன் தொகையை மொத்தமா நீ கொடுத்தா அந்த கல்யாணத்தையே நிறுத்திடுறேன் என்றெல்லாம் டயலாக் பேசியிருக்கிறார். ஹீரோ சொன்ன எந்த வாக்குறுதியையும் கடைபிடிக்கவில்லை என்பதால், அந்த வெளிநாட்டுப் பெண்மணி பல மேலிடங்களுக்குப் புகார்களை ஆதாரத்தோடு அனுப்பியிருக்கிறார். 

இதனால், பதறிப்போன நம்ம ஹீரோ புகாரை வாபஸ் வாங்கலாட்டி வீட்டுக்கு ஆட்களோடு வருவேன்னு கெத்து காட்டியிருக்கிறார். ஆனால், அதையும் பொதுவெளியில் வெளியிட்டு அந்த வெளிநாட்டுப் பெண்மணி நம்ம ஹீரோவை சந்தி சிரிக்க வைச்சுட்டார். இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம ஹீரோ கையைப் பிசைஞ்சிட்டு இருக்காராம். 

From around the web

Trending Videos

Tamilnadu News