×

ஷூட்டிங் எப்போ முடியும்.... வலிமை அப்டேட் கொடுத்த வில்லன் 

வலிமை படத்தில் நடித்த அனுபவம் மற்றும் ஷூட்டிங் குறித்து வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா பேசியிருக்கிறார். 
 
ஷூட்டிங் எப்போ முடியும்.... வலிமை அப்டேட் கொடுத்த வில்லன்

அஜித் - ஹெச்.வினோத் நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. கிரிக்கெட் போட்டிகள், அரசியல்வாதிகள் என வலிமை அப்டேட் என்ற வார்த்தை மிகவும் பிரபலம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் 50வது பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருக்கிறார். 


இந்தநிலையில் படத்தில் நடிப்பது குறித்து பேசிய வில்லனும் தெலுங்கு நடிகருமான கார்த்திகேயா, ``இதுவரை நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் எளிமையான மனிதர் அஜித் சார். அவருடன் நான் இந்தப் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை. அஜித்துடன் நடிப்பதன் மூலம் ஏகப்பட்ட புது விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் சக நடிகர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் அஜித் சார். 


ஸ்பெயினில் மூன்று நாள் ஷூட்டிங் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக அந்நாட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் ஷூட்டிங்கை முடித்துவிடுவோம்’’ என்று வலிமை அப்டேட்டும் கொடுத்திருக்கிறார் கார்த்திகேயா. ஏப்ரலில் ஸ்பெயின் ஷெட்யூல் இருக்கும் என்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News