Connect with us
man

Cinema News

வாய்வலிக்க முத்தம் கொடுத்துட்டு இப்போ CM.. விஜயை மறைமுகமாக தாக்கிய மன்சூர் அலிகான்

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அவ்வப்போது தனது அரசியல் வேலைகளுக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் மூலம் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி தனது தொண்டர்களையும் சந்தித்து வருகிறார்.

அவருடைய இலக்கு 2026 தேர்தல்தான். அதற்கான ஆயத்த பணிகளில் இப்பொழுது இருந்தே ஆரம்பித்து விட்டார் விஜய். அவர் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தப் போவதாக செய்திகள் வெளியானது. அது எப்பொழுது, எங்கே என விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இதையும் படிங்க: விடாமுயற்சியை மறந்த அஜித் ரசிகர்கள்!.. பில்லா ரீ ரிலீஸை தியேட்டரில் சும்மா தெறிக்கவிடுறாங்களே!..

இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய ஒரு கட்சி கூட்டத்தில் விஜயை மறைமுகமாக தாக்குவதாக சில விஷயங்களை கூறினார். அவர் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அந்த கட்சி கூட்டத்தில் சில விஷயங்களை கூறினார். அவர் கூறியதாவது:

‘ நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சினிமாவில் வாய் வலிக்க முத்தம் கொடுத்துட்டு வெவ்வேறு மாநில நடிகைகளுடன் முட்டி வலிக்க நடனமும் ஆடி ரிட்டையர்டுனு வரும் போது அரசியலை நோக்கி வரும் நடிகர்கள் நேராக முதலமைச்சர்தான். அப்போ வில்லன் நடிகர்களான எங்கள் நிலைமை. எங்களையும் முதலமைச்சர் ஆக்குங்க. நானும் சினிமாவில் இருக்கிறவன்தான் ’

இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. தனுஷ், ராஷ்மிகா மந்தனா வீடியோ லீக் ஆகிடுச்சே!.. என்ன ரெண்டு பேரும் இப்படி ஓடுறாங்க!

‘இருக்கிற எல்லா கோட்டாக்களையும் அவர்களே எடுத்துக் கொண்டால் எங்களின் கதி?’ என விஜயை மறைமுகமாக தாக்குவதாக அவரின் பேச்சு இருந்தது. இதை பார்த்த பல விஜய் தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் மன்சூர் அலிகானை வசைபாடி வருகிறார்கள்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top