×

80....90களில் சக்கை போடு போட்ட சிலுக்கு படங்கள்...!

 
ssss

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...அதுதான் சில்க். இவரது பெயரைப் போலவே இவரது தோற்றமும் சும்மா ஒரு உலுப்பு உலுப்பி விடும். எப்பேர்ப்பட்ட கில்லாடிகளும் சில்க்கைப் பார்த்தால் ஒரு மாதிரி நெளியத்தான் செய்வார்கள். ஏனெனில் அவரிடம் அந்தளவு அற்புதமான கவர்ச்சி அம்சம் உள்ளது.

அது கடவுள் வரப்பிரசாதம்;. சிலர் திறந்து காட்டினால் தான் கவர்ச்சியாக இருக்கும். இவர் எதையும் காட்டாமலேயே சொக்க வைத்து விடுவார். அவ்வளவு சொக்கத் தங்கம் இவரு. 

சில்க் ஸ்மிதாவை நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அப்பேர்ப்பட்ட திறமையான நடிகையை இனி பார்க்க முடியாது. அவரது குரல், தோற்றம், கண்கள், நடை, உடை, பாவனை என எதை எடுத்தாலும் கவர்ச்சி தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. அற்புதமான அந்த நடிகையை மரணம் தழுவியிருக்கக்கூடாது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிப்படங்களிலும் திறம்பட நடித்து கலக்கிய நாயகி இவர்தான். கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

dfgsg

வினுசக்கரவர்த்தி தயாரிப்பில் வெளியான வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் ஸ்மிதா அறிமுகமானார். இப்படத்தில் சிலுக்கு என்ற சாராயம் விற்கும் பெண் கேரக்டரில் நடித்தார். இப்படத்தில் ஸ்மிதா என்ற புனைப்பெயரில் அறிமுகமானார். பின்னாளில் இரு பெயரையும் சேர்த்து சில்க் ஸ்மிதா என அடையாளம் ஆகி விட்டார். 

விஜயலெட்சுமி தான் இவரது இயற்பெயர். பிறப்பு ஆந்திராவின் ஏலூரு. 2.12.1960ல் பிறந்தார். என்றாலும் இவரது பூர்வீகம் கரூர்தான். வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. இவரது மயக்கும் தோற்றம் இவருக்கே பல தொல்லைகளைக் கொடுத்தது.  
சினிமா வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்ப கால கட்டத்தில் இவருக்கு ஒப்பனையாளர் வேலை தான் கிடைத்தது. அதன்பின்னர் தான் வினுசக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தில் 1979ல் அறிமுகமானார்.

அதே ஆண்டில் மலையாளத்திலும் அறிமுகமானார். 80கள் மற்றும் 90களில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம். கமல், ரஜினி, பிரபு, தியாகராஜன் நடித்த படங்களில் சில்க் நடித்து தூள் கிளப்பியிருப்பார்.

laaa

லயனம் என்ற மலையாளப்படத்தில் கவர்ச்சியை வாரி வாரி வழங்கியிருப்பார். இது வயது வந்தோருக்கான படம் என்ற சான்றிதழோடு வெளியானது. 

அவர்கள் தான் ஏராளமான சில்க் படங்களைப் பார்த்து ரசித்து பிரமித்துப் போனவர்களாக இருப்பர். துரதிர்ஷ்டம் 1996ல் சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் மன இறுக்கத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. ஆனாலும் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவின. 

இப்போது அவர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படங்களைப் பார்க்கலாம். 

மூன்று முகம் 
1982ல் வெளியான படம். ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட 3 வேடங்களில் ரஜினி அசத்தினார். இப்படத்தில் சில்க் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை வாரி வழங்கியிருப்பார்.

சங்கர் கணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். தேவாமிருதம், ஆசையுள்ள ரோஷக்காரா, நான் செய்த குறும்பு, எத்தனையோ ஆகிய பாடல்கள் உள்ளன. 

மூன்றாம்பிறை 

pooo

இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி முக்கிய வேடங்களில் நடித்து இருப்பார்கள். 1982ல் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியானது. சில்க் ஸ்மிதா பூரணம் விஸ்வநாதனின் மனைவியாக நடித்து இருப்பார்.

இரவு நேரம் படுக்கையில் அவரது தேவையை வயதான கணவர் நிறைவேற்ற முடியாததால் தவியாய் தவிப்பார். நெளிவார். அவரால் அடக்க முடியாமல் கமல்ஹாசனை சந்தித்து தன் ஆசையை நிறைவேற்ற நினைப்பார்.

அந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு குத்துப்பாடல் கிடைக்கும். அதுதான் பொன்மேனி உருகுதே என்ற சில்க் பாடல்;. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். கண்ணே கலைமானே, நரி கதை, வானெங்கும் தங்க, பூங்காற்றே ஆகிய பாடல்கள் உள்ளன.

பாயும் புலி 

fdsgd

ஆடி மாசம் காத்தடிக்க வாடி புள்ள சேத்தணைக்க என்ற பாடலில் ரஜினியுடன் சில்க் போடும் குத்தாட்டத்தை யாராலும் மறக்க முடியாது. 1983ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவானது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துகள். ரஜினி, ராதா, ஜெய்சங்கள் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆப்பக்கடை அன்னக்கிளி, பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், வா வா மாமா ஆகிய பாடல்கள் உள்ளன. 

சகலகலா வல்லவன் 

ddds

சகலகலா வல்லவன் படத்தில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா...தூக்கம் போச்சுது யம்மா... என்ற கிக்கேற்றும் பாடலில் நம்மை சொக்க வைத்து விடுவார் சில்க். 1982ல் வெளியான இப்படத்தை ஏவிஎம் தயாரிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். படம் சக்கை போடு போட்டது.

இளையராஜாவின் இசையில் இளமை இதோ இதோ, நிலா காயுது, கட்டவண்டி, அம்மன் கோவில் கிழக்காலே, நேத்து ராத்திரி ஆகிய பாடல்கள் உள்ளன.

இவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 2011ல் தி டர்டி பிக்சர்ஸ் என்ற இந்தி படம் வெளியானது. இதில் சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார். 

From around the web

Trending Videos

Tamilnadu News