Categories: Cinema News latest news

வேற வழி இல்ல ஆத்தா!.. அடிபணிந்த அஜித்!.. பல வருடங்கள் கழித்து அவர் செய்ய போகும் காரியம்!.

Kalaignar 100:  தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கலைஞர் மு.கருணாநிதி. தன்னுடைய ஆர்ப்பறிக்கும் வசனத்தால் திராவிட கருத்துக்களை அசால்ட்டாக மக்கள் மனதில் பதிய வைத்தவர்.

எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் சினிமாவில் வளர துவங்கிய நேரத்தில் கலைஞரின் வசனம் மிகவும் உறுதுணையாக அமைந்தது. மூவேந்தர்களாக எம்ஜிஆர்.சிவாஜி, ஜெமினி இவர்களைத்தான் சொல்வோம். ஆனால் உண்மையிலேயே மூவேந்தர்களாக இருந்தது எம்ஜிஆர், சிவாஜி மற்றும் கருணாநிதிதான்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தில் நானா?!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே மம்முட்டி!…

அந்தளவுக்கு கருணாநிதியின் பங்களிப்பு சினிமாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்த நிலையில் கலைஞரின் 100வது பிறந்த நாளை  கொண்டாடும் விதமாக தமிழக அரசு பிரம்மாண்ட விழாவை நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.

திரையுலகம் சார்பாகவும் கலைஞர் 100 விழா என்ற விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த அத்தனை பேரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினியும் கமலும் பங்கேற்பார்கள் என்று முடிவாகி விட்டது.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவை பற்றி கொஞ்சாமாவது தெரியுமா? ரஜினியை வெளுத்து வாங்கும் பிரபலம்

விஜய் , அஜித் இவர்கள்தான் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது, ஏனெனில் விஜய் ஒரு பக்கம் திராவிட இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்தும் இருப்பதால் அவர் கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று கூறப்பட்டது.

அஜித் வெளி நாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த காரணத்தை சொல்லி அவரும் எஸ்கேப் ஆகிவிடுவார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திரைப்பட தொழிலாள சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: சினிமாவில்தான் வீரமெல்லாம்.. நிஜத்தில் அட்டக்கத்திகள்!.. நடிகர்களை விளாசிய பிரபலம்…

அதில் கலைஞர் 100 விழாவில் கமல், ரஜினி , அஜித், விஜய் ஆகியோர் கண்டிப்பாக பங்கேற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நட்சத்திரங்களால் ஜொலிக்கப் போகிறது கலைஞர் 100 விழா.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini