Connect with us
rajini

Cinema News

எம்.ஆர்.ராதாவை பற்றி கொஞ்சாமாவது தெரியுமா? ரஜினியை வெளுத்து வாங்கும் பிரபலம்

MR Radha: தமிழ் சினிமாவில் சீர்திருத்தக் கருத்துக்களை அசால்டாக தன் நகைச்சுவையின் மூலம் தெறிக்கவிட்டவர் நடிகர் எம்.ஆர்.ராதா. திராவிட கழகத்தின் ஆணிவேராகவும் இருந்தவர். கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்தவர்.

இவரை நடிகவேள் என்று அழைத்து ஒரு பெருமைமிக்க பட்டமாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த நடிகவேள் பட்டத்தை மிக எளிதாக எஸ்.ஜே.சூர்யாவிற்கு கொடுத்து அழகுபார்க்க நினைத்தார் ரஜினி. எஸ்.ஜே.சூர்யாவை நடிப்பு அரக்கன், நடிப்பு சூறாவளி என நடிப்பிற்கு அடையாளமாக எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

இதையும் படிங்க: சினிமாவில்தான் வீரமெல்லாம்.. நிஜத்தில் அட்டக்கத்திகள்!.. நடிகர்களை விளாசிய பிரபலம்…

அதற்கு பொருத்தமானவர்தான் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் ரஜினி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். எஸ்.ஜே.சூர்யாவை அடுத்த நடிகவேள் என்று குறிப்பிட்டு அந்த அறிக்கையை வெளியிட்டார். உங்க பட்டத்தை இன்னொருத்தவர் பறிக்கிறார் என்று தெரிந்தும் காக்கா கழுகு கதை எல்லாம் சொல்லி கிண்டலடித்த ரஜினி இப்போது நடிகவேள் பட்டத்தை மட்டும் எப்படி இன்னொருவருக்கு கொடுக்க முடியும்?

என்று கேட்கின்றனர். அதுவும் யாருடைய பட்டத்தை யாருக்கு கொடுக்கிறது? எம்.ஆர்.ராதாவை பற்றி முழுவதுமாக புத்தகத்தில் படித்திருக்கிறாரா ரஜினி? அல்லது ராதாரவியிடமாவது கேட்டு தெரிந்திருப்பாரா? எப்பேற்பட்ட கொள்கைவாதி?

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி!.. அந்த நடிகரால ‘வடை போச்சே’ மொமெண்ட்டில் பார்த்திபன்…

அவருடைய பட்டத்தை எப்படி இவரால் எடுக்க முடியும்? விமலாவின் விதவை மறுமணம் என்ற நாடகத்தை சுதந்திரத்திற்கு முன்னரே போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் ராதா. கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல், மொட்டை அடித்தல் என்ற நிலைமை இருந்த காலத்தில் விதவைகள் தாராளமாக மறுமணம் செய்து கொள்ளலாம் என்று தன் நாடகத்தின் மூலம் சொன்னவர் ராதா.

இது  தெரிந்ததும் ஈ.வெ.ரா போன்ற பெரிய தலைவர்கள் அந்த நாடகத்தை பார்க்க முன் அனுமதி  இல்லாமல் வந்திருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு நாடக அரங்கில் உட்கார இடமில்லையாம். இதை ராதாவிடம் தெரிவிக்க ‘முன் அனுமதி இல்லாமல் வந்தது அவர்கள் தவறு. நாம் என்ன பண்ண முடியும்?’ என்று சொன்னவர் ராதா. இவருடைய பட்டத்தையா எஸ்.ஜே.சூர்யாவிற்கு கொடுக்க முடியும்? என ஒரு பிரபல பத்திரிக்கையாளர் ரஜினிக்கு எதிராக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டா இதுக்குத்தான் பழகுனியானு கேட்பாரு? அஜித்துக்கும் இந்த சீரியல் நடிகருக்கும் இப்படி ஒரு நட்பா?

google news
Continue Reading

More in Cinema News

To Top