Categories: Cinema News latest news

தலையில தொப்பி!.. ஹாலிவுட் நடிகர் மாதிரி இருக்காரே.. என்ன அஜித் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரு!..

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்துக்காக அஜர்பைஜானிலேயே ஐக்கியமான நிலையில், தலையில் தொப்பி அணிந்துக் கொண்டு ஹாலிவுட் நடிகர் போல இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் விடாமுயற்சி படத்தில் விடாப்பிடியாக நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இதுக்கு மேல அசிங்கம் தேவையா?.. லியோவையும் லோகேஷ் கனகராஜையும் இந்த கிழி கிழிச்சிட்டாரே எஸ்.ஏ.சி!..

முழுக்க முழுக்க ஹாலிவுட் ஆக்‌ஷன் படம் போல இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ள மகிழ் திருமேனி அஜர்பைஜானிலேயே மொத்த படத்தையும் படமாக்கி வருகிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அஜித் படம் நல்லா வரணும் என்பது மட்டும் தான் லைகாவின் கண்டிஷனாம்.

துபாயில் வீடு வாங்கி உள்ள அஜித் குமார் ஷூட்டிங்கின் இடையே வரும் பிரேக்குகளில் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி வருவதாகவும் கூறுகின்றனர். மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்த பின்னர் தான் அஜித் சென்னை திரும்புவார் என்றும் சொல்கின்றனர்.

இதையும் படிங்க: ச்சீ.. கருமம்.. ஆசனம் பேரே ஒரு மாதிரி இருக்கே!.. அமலா போல் உட்கார்ந்து இருக்க போஸை பார்த்தீங்களா!..

அஜித் டிசர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களையும், கோட் அணிந்து டின்னர் சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு வந்த ஆரவ் அஜித் ரசிகர்களை சந்தோஷமாக்கி வந்த நிலையில், பீக்கி பைண்டர்ஸ் வெப்சீரிஸில் ஹீரோ சிலியன் மர்பி பயன்படுத்திய தொப்பி போல அணிந்து கொண்டு அஜித் போஸ் கொடுத்துள்ள புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Saranya M
Published by
Saranya M