Categories: Cinema News latest news

விக்கியை தூக்கி அடிச்சது போல விடாமுயற்சியிலும் வேலையை காட்டிய அஜித்.. என்ன தான் பாஸ் நடக்குது?

நடிகர் அஜித் குமார் துணிவு படத்தை பெரிதும் நம்பிய நிலையில் அதன் இரண்டாம் பாதி சொதப்பி விட்டது. அதனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு விஜய்யின் வாரிசு படத்தின் வசூலை முந்த முடியாமல் போய் விட்டது.

மேலும், லியோ படத்தின் மூலம் விஜய் 600 கோடி வசூலை ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது நடிகர் அஜித்தை ரொம்பவே பாதித்துள்ளதாக கூறுகின்றனர். எப்படியாவது அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என கடுமையாக வொர்க்கவுட் செய்து உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட வேலைகளையும் அஜித் செய்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஹீரோயின் ஆகப்போறாருன்னு வனிதா அக்கா சீன் போட்டாங்க!.. வெளியே போனதும் ஜோவிகா என்ன பண்றாங்க பாருங்க!..

அஜர்பைஜானிலேயே படத்தை ஹாலிவுட் லெவலுக்கு எடுத்து வெளியிட்டு பான் இந்தியா வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக லியோவில் நடித்த திரிஷா, அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத்தை விடாமுயற்சி படத்திற்கு புக் செய்திருக்கிறார். மேலும், பிரியா பவானி சங்கர், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், அவர் இயக்கினால் அடுத்த படத்தை வைத்து விஜய்யின் மார்க்கெட்டை முந்த முடியாது என்பதால் தான் அவரை தூக்கி அடித்தார் அஜித் என்கின்றனர். இந்நிலையில், தற்போது திடீரென விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளரையும் அஜித் அதிரடியாக மாற்றியிருக்கிறார் என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஹெவியா ஜெயிலர் வாடை வருதே!.. வேட்டையன் இன்ட்ரோ டீசரை பங்கமா கலாய்க்கும் தளபதி ஃபேன்ஸ்!

இதுவரை அந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்தார். இந்நிலையில், என்ன ஆனது என்றே தெரியவில்லை. சென்னை வந்து விட்டு மீண்டும் அஜர்பைஜானுக்கு அஜித் சென்ற நிலையில், ஓம் பிரகாஷ் தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M
Published by
Saranya M