
Cinema News
உதவி கேட்டவரை கண்டுகொள்ளாமல் போன அஜித்… பின்னாடி அவர் செஞ்ச வேலைய பத்தி தெரியுமா?…
Published on
Ajithkumar: வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என நினைப்பவர்கள் சிலரே. தான் பிறருக்கு செய்யும் உதவிகளை வீடியோ எடுப்பது, அதை சமூக வலை தளங்களில் பதுவிடுவது என பப்ளிசிட்டி தேடிகொள்பவர்கள் மத்தியில் தான் செய்யும் உதவிகள் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என நினைப்பவர் நடிகர் அஜித் குமார்.
இவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க ஆரம்ப புள்ளியாக அமைந்த திரைப்படம் அமராவதி. இப்படத்திற்கு பின் இவர் பல திரைப்படங்களில் நடித்து இன்று அனைவரும் விரும்பும் முன்னணி கதாநாயகனாய் வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் இயல்பான குணமும் ஒரு காரணம்.
இதையும் வாசிங்க:கதை கேட்குறதுல அஜித் ஃபாலோ பண்ணும் நடிகர் யார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!..
இவர் பொதுவாக விளம்பரங்களை விரும்புவதில்லை. பொதுவாக எந்தவொரு நடிகராக இருந்தாலும் தான் நடிக்கும் படத்திற்கு ஆடியோ லாஞ்ச், டிரெய்லர் வெளியீட்டு விழா, வெற்றி விழா என பல நிகழ்ச்சிகளின் மூலம் தனக்கு விளம்பரம் தேடி கொள்வர்.
ஆனால் அஜித்குமார் இதற்கு எதிர்மாறாக தான் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அதற்காக அவர் எந்தவொரு விளம்பரமும் செய்வதில்லை. அப்படிபட்ட மனிதர் தான் மற்றவர்களுக்கு உதவி செய்வதை கூட வெளியில் காட்டி கொள்ள மாட்டார். இதற்கு இவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவமே ஒரு சான்று.
இதையும் வாசிங்க:ரஜினியின் கோபத்தால் சினிமாவில் நடிக்கவந்த விஜயகாந்த்!. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!..
இவருடன் முகவரி திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம். இப்படத்தின் படபிடிப்பின் போது ஒரு முறை பொன்னம்பலத்தின் நண்பர் ஒருவரின் குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாம். அப்போது உடனடியாக 56,000 ரூபாய் தேவைபட்டதாம். பொன்னம்பலமோ அந்த நேரத்தில் உதவி செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த அஜித் அந்த குழந்தை பற்றிய அனைத்து தகவலையும் கேட்டு தெரிந்து கொண்டாராம். பின்பு அங்கிருந்து எதுவும் சொல்லாமலே படபிடிப்புக்கு சென்றுவிட்டாராம். பின்பு பொன்னம்பலம் மதிய உணவு இடைவேளையின் போது தயக்கத்துடன் அஜித் அருகில் சென்றுள்ளார். உடனே அஜித் அண்ணன்… நான் 11 மணிக்கே ஷாலினியிடம் அனைத்து விஷயத்தையும் சொல்லிவிட்டேன்… 11.05க்கு ஷாலினி பணத்தை கட்டியிருப்பார்… என கூறினாராம். இதை கேட்ட பொன்னம்பலத்திற்கு பெரிய ஆறுதலாக இருந்ததாக இவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:ஓவரா பண்ணக்கூடாது!.. அமீர் மட்டும் நினைச்சிருந்தா!. ஞானவேல் ராஜாவை பொளந்துகட்டும் தயாரிப்பாளர்..
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...