Categories: Bigg Boss latest news

நான் தான் புல்லி கேங்கோட ஹெட்டு!.. யக்கோவ் இப்படியா உண்மைய சொல்லுவீங்க!..ஆனா அது மாயா பதவி தானே…

Vanitha Vijayakumar: பிக்பாஸில் இந்த சீசன் தான் புல்லி கேங். ஆனா மூணாவது சீசனிலே வனிதா செய்ததை இன்னும் பல ரசிகர்களால் மறக்கவே முடியாது. அத்தனை சேட்டை செய்தவரை ரசிகர்கள் சில வாரத்தில் வெளியில் துரத்தினர். இருந்தும் வைல்ட் கார்டாக எண்ட்ரி கொடுத்தார்.

அப்போதும் போமா வெளியே எனத் திரத்தியே விட்டனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே வந்தும் அவர் அலப்பறையை காட்டினார். கடைசியில் கமல் வெளியேற மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிட்டால் என்ன ஆகுமோ என நினைத்து டாட்டா காட்டி வெளியேறிவிட்டார். இப்படியாக இருக்க கடைசி சில சீசன்களை ரிவியூ செய்து வருகிறார் வனிதா.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..

இந்த சீசனில் அவர் மகள் ஜோவிகா உள்ளே செல்ல இருப்பதாக தகவல் வந்ததுமே அக்கா ஆட்டம் அதிகமாக இருக்குமே என பலரும் கிசுகிசுத்தனர். கடைசியில் அவரும் ஜோவிகாவையும் அவருடைய டீமையும் தலையில் தூக்கி வைத்து ஆடிய ஆட்டத்தை பார்க்கும் பலருக்கு கடுப்பை தான் கொடுத்தது. 

ஒரு கட்டத்தில் உள்ளே வந்த பழைய போட்டியாளர்கள் தேவையே இல்லாமல் நிறைய டயலாக் விட்டனர். இதற்கு காரணம் வனிதா தான் எனக் கூறப்படுகிறது. அவர் தான் வீட்டிற்கு அழைத்து தனியாக கோச்சிங் கொடுத்து மாயாவுக்கு சப்போர்ட் செய்ய சொல்லி உள்ளே அனுப்பியதாக கூறினர்.

இதையும் படிங்க: கோலிவுட்டின் ராசியான நடிகையே இவங்க தானாம்!.. ஹாட்ரிக் ஹிட் கொடுத்தா அல்வா போல அள்ளிடுவாங்களே!..

அப்படியே வச்சிக்கோங்க. நான் தான் புல்லி கேங்கோட தலைவராவே இருந்துக்கிறேன் எனவும் சவடால் பேசி இருக்கிறார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மாயாவை தன்னுடைய வீட்டில் இருக்கும் வீடியோவையும் வனிதா தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily