Connect with us

Cinema News

அந்நியன் கிளைமேக்ஸில் நடந்த திடீர் மேஜிக்… ஷங்கர் வைத்த ட்விஸ்ட்டால் ஆச்சரியப்பட்ட விக்ரம்!..

Anniyan: விக்ரமின் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படத்தின் கிளைமேக்ஸை முதலில் இயக்குனர் ஷங்கர் வேறு மாதிரியாக உருவாக்கி வைத்த நிலையில், அதை கடைசியில் மாற்றிய சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வி.ரவிசந்திரனின் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சதா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். அந்நியன், அம்பி, ரெமோ என மூன்று பெர்ஸ்னாலிட்டியாக விக்ரம் நடித்திருப்பார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக இப்படி ஓபனா இறங்குவீங்க? நயன்தாரா டிரெஸால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..

26 கோடி ரூபாய்  பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான முதல் படம் அந்நியன் தான். இப்படம் ரிலீஸான இரண்டு மாதம் முன்னர் தான் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இரண்டுமே ஒரே மாதிரியான நோயை சொன்ன கதையாக இருந்தாலும் இரண்டு படங்களுக்குமே பெரிய அளவிலான வரவேற்பினை பெற்றது.

இப்படத்தில் விக்ரமின் மூன்று வகையான நடிப்பு பெரிய ஹிட் கொடுத்தது. பிரகாஷ் ராஜ் மற்றும் விக்ரம் இருவருக்கும் இடையிலான கிளைமேக்ஸ் காட்சியில் ஆச்சரியப்படாத ரசிகர்களே இல்லை. ஒரு நொடியில் இருவேறு பெர்ஸ்னாலிட்டியாக மாறுவார். முதலில் ஷங்கர் அந்நியன் கேரக்டர் மட்டுமே வரும்படி கதையை எழுதி இருப்பார்.

இதையும் படிங்க: ராமராஜன் கொடுத்த லவ் லெட்டர்! பொக்கிஷமாக வைத்திருக்கும் நளினி.. என்ன எழுதியிருக்கார் தெரியுமா

Continue Reading

More in Cinema News

To Top