">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சுரேஷை சீண்டும் அர்ச்சனா.. பிளான் பண்னியே வந்திருப்பார் போல… பிக்பாஸ் வீடியோ
சுரேஷை சீண்டும் அர்ச்சனா.. பிளான் பண்னியே வந்திருப்பார் போல… பிக்பாஸ் வீடியோ
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்த முறையும் கமலஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சண்டை, சச்சரவு, போட்டி, வாக்குவாதம், நடன நிகழ்ச்சிகள் என நிகழ்ச்சி போரடிக்காமல் போய் வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவாக டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவை பிக்பாஸ் களம் இறக்கியுள்ளார். அவர் எப்போதும் வளவளவென பேசிக்கொண்டே இருப்பார். எனவே, இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவுடன் அவர் சுரேஷை சீண்ட துவங்கிவிட்டார். மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து அவரை கிண்டலடிக்கும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதைப்பார்க்கும் போது ‘சிறப்பான சம்பவம் இருக்கு’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jQ9nuFzUFf
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020