Categories: Cinema News latest news

தன்னிடம் வேலை செய்தவரை விரும்பிய மகள்!.. ஏ.ஆர்.ரகுமான் என்ன செய்தார் தெரியுமா?

ARRahman: ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் அறிமுகமானவர். அவருக்கு அந்த வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இதனால் தான் என்னவோ தன் மகள்களுக்கு திருமணத்தில் இந்த விஷயத்தை மிஸ் செய்யாமல் பார்த்தாராம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

குழந்தை பருவத்திலே குடும்பத்தை காப்பாத்த சின்ன வயசிலேயே வேலைக்கு வந்தவர் ரகுமான். விளம்பர படத்திற்கு மியூசிக் எடுக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அங்கு இவரை பார்த்த மணிரத்னத்தின் அக்கா தான் ரகுமானை பார்க்கிறார். அவரை பயன்படுத்தலாம் என்று மணிரத்னத்திடம் சொல்கிறார்.

இதையும் படிங்க: என்னம்மா ரோகினி அப்படியே பல்டி அடிச்சிட்ட!.. இந்த ரவியும், ஸ்ருதியும் யாரு பக்கம் டா! மாத்தி மாத்தி பேசுறீங்க…

அந்த நேரத்தில் இளையராஜாவுடன் இருந்த மோதலில் புதிய மியூசிக் இயக்குனரை அறிமுகப்படுத்த நினைக்கிறார். அப்போ வைரமுத்து புதிய இசையமைப்பாளரை பார்க்க ஆவலாக வருகிறார். ஆனால் அங்கு சின்ன பையனாக இருந்த ரகுமானை பார்த்து கிண்டலடித்தாராம். 

ரகுமான் தன்னுடைய பிரச்னையில் இருந்து தப்பிக்க இந்த வாய்ப்பு தான் என்பதை புரிந்து கொண்டவர். சரியாக பிடித்துக்கொண்டு முன்னேறுகிறார். இதனால் கஷ்டப்படுபவர்களுக்கு நிறைய உதவியை செய்வாராம். ஆனால் அதை பெரிதாக வெளியில் காட்டிக்கவே மாட்டாராம்.

இதையும் படிங்க: ஏதோ மிஸ் ஆகுது!.. தனுஷோட பெஸ்ட் இது இல்ல!.. ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா ‘கேப்டன் மில்லர்?..’..

ஆஸ்கார் விருது வாங்கியதுக்கு ரகுமானுக்காக நடத்தப்பட்ட விழாவில் இளையராஜா, எம்.எஸ்.விக்கு கிடைக்க வேண்டியதை பிரதிநிதியாக தான் பெற்று கொண்டதாக சொல்லினாராம். ரகுமான் தனிப்பட்ட விருப்பத்தை யார் மேலேயும் திணிக்கவே மாட்டார். அதனால் தான் இருமகள்களும் தங்களுக்கு விருப்பமான உடையிலே பொதுமேடையில் காணப்படுகின்றனர்.

அதிலும், சமீபத்தில் அவரின் மகள் கதீஜாவுக்கு திருமணம் நடந்தது. அவரது மாப்பிள்ளை ஒரு சாதாரண சவுண்ட் என்ஜினியர் தான். எங்கையும் சொத்துக்காக பார்க்கவில்லை. அந்த பையன் கேரக்டரை மட்டுமே பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily