Connect with us
atlee

Cinema News

அண்ணன் புகழை பாடிய அட்லீக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கடுப்பில் பிரபலம் செய்த வேலை…

சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் ஜவான். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அட்லீ என்றைக்கும் இல்லாத வகையில் தன் மனதில் வைத்திருந்த வலிகளை எல்லாம் கொட்டினார் என்றுதான் சொல்லவேண்டும்.

அதிலும் குறிப்பாக விஜய் அண்ணா, என் அண்ணா, என் தளபதி என பேசும் போதெல்லாம் விஜயை பற்றியே குறிப்பிட்டு பெருமையாக பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஷாரூக்கான், பிரியாமணி போன்றோரும் விஜயை பற்றி ஏராளமான விஷயங்களை பேசினார்களாம்.

இதையும் படிங்க : கர்வத்தில் எம்.எஸ்.வி செய்த செயல்… ஒரே பாடலால் கண்ணீர் விட வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

ஆனால் நேற்று அந்த நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பும் போது அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நடந்த மாதிரியே தெரியவில்லை. விசாரித்ததில் விஜயை பற்றி பேசியவைகளை கட் செய்து ஒளிபரப்பியிருக்கிறார்களாம். இதை பார்த்த ரசிகர்கள் சன் டிவிக்கு அப்படி என்ன விஜய் மீது கோபம் என்று புலம்பி வந்தனர்.

ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் காரணமே வேறு. இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை வரும் என்று  முன்பே அறிந்திருந்த சன் டிவி இந்த நிகழ்ச்சியை புரடியூஸ் மற்றும் எடிட் செய்வது கோகுலம் மூவிஸ் தான் என்று ட்விட் போட்டு விட்டதாம். அதாவது இதுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது மாதிரி இந்த ட்விட்டை போட்டிருக்கிறார்களாம்.

இதையும் படிங்க : ஜெயலலிதாவை தொடர்ந்து சின்னம்மாவிடமும் இருந்து வந்த மிரட்டல்! சசிகலா தூண்டுதலில் விஜய் நடித்த படம்

ஆனால் அதுதான் உண்மையாம். நேற்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி 2.30 மணி நேரம் ஒளிபரப்பானது. அதற்காக 2 லட்சம் கட்டித்தான் கோகுலம் மூவிஸ் ஒளிபரப்பியதாம். மேலும் அந்த நிகழ்ச்சிக்கான செலவையும் கோகுலம் மூவிஸ்தான் பார்த்துக் கொண்டதாம். அதற்கு 3 கோடி வரை செலவாகியதாம்.

மேலும் இந்த விழாவை நடத்தியது கபிலன் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனமாம். இந்த நிறுவனம் விஜய் டிவி மகேந்திரனின் நண்பர்களாம். விஜய் டிவி மகேந்திரன் ஏற்கனவே ராஜ்கமல் புரடக்‌ஷனில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மகேந்திரன் அட்லீக்கு உறவுமுறையாம். அதனாலேயே ஜவான் படத்தின் ஆடியோ விழாவை சென்னையில் தான் நடத்த போகிறோம் என்று அட்லீ சொன்னதும் தன் நண்பர்களான கபிலன் குரூப்பை வைத்து மகேந்திரன் தான் அந்த விழாவை நடத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க : அது ரஜினிக்குதான்… அதுக்கு ஏன் இத்தனை சண்டை அமைதியா இருங்க! சுரேஷ் கிருஷ்ணா பதிலடி!

இதற்கிடையில் ராஜ்கமல் நிறுவனம் விஜயின் கால்ஷீட்டிற்காக காத்திருக்க ஆனால் விஜய் இப்போதைக்கு முடியாது என்று மறுத்திருக்கிறார். இந்த ஒரு கோபம்தான். மகேந்திரன் சொல்லி விழாவில் விஜயின் புகழை பாடிய எந்தவொரு பேச்சும் டிவியில் வரக்கூடாது என்பதற்காக கட் செய்திருக்கிறார்களாம். என்னத்ததான் தூக்கி விசினாலும் விஜயின் புகழ் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top