×

இருங்கடா!.. ஒரு ஹிட்டு கொடுக்காம போக மாட்டேன்... பாரதிராஜா ஆவேசம்....

 
bharathi

தமிழ் சினிமாவில் மண்வாசணையோடு திரைப்படங்களை எடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவை கைப்பிடித்து வயல் வெளிக்கு அழைத்து வந்தவர். கிராமத்து மனிதர்களின் காதல், கோபம், பகை, வன்மம், பாசம் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெள்ளித்திரையில் படம் போட்டு காட்டியவர்.,

அவர் இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட பல படங்கள் வெள்ளிவிழாவை கொண்டாடியது. இவரின் உதவியாளர்களாக பணிபுரிந்த பாக்கியராஜ், மனோபாலா, மணி வண்ணன் என பலரும் பின்னாளில் தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்களாக மாறினர். அவர்களிடம் உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள்தான் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களாக உள்ளனர்.

bharathi

ஸ்ரீதேவி, ராதா, ராதிகா, ரேவதி, ரேகா என பல நடிகைகளை உருவாக்கியவர். அதேபோல் கார்த்தி, ராஜா, சுதாகர், பாண்டியன், நெப்போலியன், சந்திரசேகர் என பல நடிகர்களையும் உருவாக்கியவர். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

சொல்லப்போனால் கிழக்கு சீமையிலே திரைப்படத்திற்கு பின் அவரின் திரைப்படங்கள் எதுவும் வெற்றியை பெறவில்லை. அப்படம் 1993ம் ஆண்டு வெளியானது. எனவே, பாரதிராஜா ஹிட் கொடுத்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார். 

bharati

எனவே, தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்காமல் போக மாட்டேன் என தனக்கு நெருங்கியவர்களிடம் அவர் கூறி வருகிறாராம். 

From around the web

Trending Videos

Tamilnadu News