×

முதலில் வெளியேறப்போகும் நடிகை ரேகா...? நாமினேஷனுக்கு வந்த 4 பேர்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் ரேகா

 

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு நேர்ந்த சில மோசமான அனுபவங்களை குறித்தும் அதிலிருந்து வாழ்வில் மீண்டு வந்ததை குறித்து சக ஹவுஸ்மேட்ஸ் உடன் பகிர்ந்துகொண்டனர்.

அதில் யாருடைய ஸ்டோரி அதிகம் கவர்ந்ததோ அவர்களை தவிர மற்ற நபர்களை சோமசேகர் தேர்வு செய்து நாமினேட் செய்தார். அதில் சனம் ஷெட்டி, கேப்ரில்லா , ரேகா , சம்யுக்தா உள்ளிட்ட நான்கு பெரும் இந்த நாமினேஷ் ரவுண்டிற்கு தேர்வு செய்யப்பட்டு இதில் யாரேனும் இந்த வாரம் எவிக்ட் செய்யப்படவுள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த முறை நிச்சயம் நடிகை ரேகா வெளியேற்றப்பட நிறைய வாய்ப்பு உள்ளது. அதை அடுத்து சம்யுக்தா வெளியேற்றப்படுவார் என யூகிக்க முடிகிறது. சனம் ஷெட்டி இப்போதைக்கு வெளியேற வாய்ப்பில்லை. அவருக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தியாக இருப்பதால் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போடுவதற்காவது பிக்பாஸ் தக்க வைத்துக்கொள்வார்.

From around the web

Trending Videos

Tamilnadu News