Connect with us

Bigg Boss

அப்போ பிரதீப் அப்படித்தானா?.. அசிங்கப்பட்ட தன்னோட இமேஜை சரி செய்ய அத்தனை குறும்படம் போட்ட ஆண்டவர்!..

பிரதீப் ஆண்டனி ஒரு உமனைசர் தான் என்பதை மீண்டும் நிரூபித்து தான் வெளியேற்றியது சரி தான் என்றும் அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் குழப்பமும் வேண்டாம் என்பதை தெளிவுப்படுத்தவே சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் அத்தனை குறும்படங்களை போட்டுள்ளார் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்களுக்கு பிரதீப் ஆண்டனியால் ஆபத்து இருப்பது உண்மையா? என கேட்ட கமல் அந்த முடிவில் இருந்து பின் வாங்க வேண்டாம் என்றும் ஏன் மாற்றி மாற்றி பேசி, என் மானத்த வாங்குறீங்க என கேட்கவே நேற்றைய எபிசோடை பயன்படுத்திக் கொண்டார் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: லியோவுக்கு மட்டும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதியில்லை!.. சல்மான் கான் படத்துக்கு மட்டும் அனுமதியா?..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பித்து தீபாவளி வரை செம சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. ப்ரோமோவில் பிரதீப்புக்கு ஆதரவும், புல்லி கேங்குக்கு கமல் வேட்டும் வைப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வழக்கம் போல ஷோவில் தான் செய்தது தான் சரி என்றும் பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுத்தேன்.

ஆனால், அவர் நான் 4 வயசுல இருந்து கெட்ட வார்த்தை கத்துக்கிட்டேன். அப்படித்தான் பேசுவேன். வேண்டுமென்று தான் பாத்ரூம் டோரை ஓப்பன் செய்து விட்டு போனேன். இவங்க எல்லாம் ஆர்ட்டிஸ்ட் இவங்களை வச்சு நான் ஒரு டிராமா பிக் பாஸ் வீட்ல போட ட்ரை பண்ணேன் என பேசிய நிலையில், வீட்டுக்கு போயிட்டு வா தம்பி என பிரதீப்பை கமல் வெளியே அனுப்பி விட்டார்.

இதையும் படிங்க: வழக்கறிஞராக வரிந்துக்கட்டி நடித்துள்ள ஜெய்!.. அருண்ராஜா காமராஜின் லேபில் வெப்சீரிஸ் விமர்சனம் இதோ!..

ஆனால், கமல் தான் பிரதீப்பை வெளியே அனுப்பினார் என்றும் நாங்க 5 பேரும் பிரதீப்பை வெளியே அனுப்பவில்லை என்றும் மாற்றி பேசிய நிலையில், உங்களுக்காகத்தான் அனுப்பினேன் என தன்னை சேஃப் கார்டு செய்யவே அத்தனை குறும்படங்களை கமல் போட்டுக் காட்டினார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top