Connect with us
biggboss season 7

Bigg Boss

இது உங்களுக்கு தேவையா?… பிக்பாஸின் தண்டனையால் கடுப்பான விசித்ரா…

பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் பிக்பாஸ். இதன் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்னர். இதன் இரண்டாம் நாளனா இன்றே போட்டியாளர்கள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர்.

18 போட்டியாளர்களில் யாரெல்லாம் சுவரஸ்யம் குறைவாக இருக்கிறார்கள் என வீட்டின் கேப்டனான விஜயிடம் பிக் பாஸ் கூற சொல்கிறார். விஜய்யோ ரவீனா, ஐஷூ, பாவா செல்லதுரை, அனன்யா, வினுஷா தேவி, நெக்சன் போன்ரவர்களை தேர்வு செய்கிறார்.

இதையும் வாசிங்க:வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

பின் அவர்கள் அனைவரும் ஸ்மால் பாக்ஸ் ரூமுக்கு செல்ல வேண்டும். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவர்கள்தான் சமையல் செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கிறார் பிக் பாஸ்.

ஆனால் இன்றைய ப்ரோமோவில் விசித்ரா மற்றும் யுகேந்திரன் சமயலறையை உபயோகப்படுத்திகின்றனர். அதனால் பிக் பாஸ் அவர்களையும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு போகுமாறு சொல்கிறார்.

இதையும் வாசிங்க:துண்டை கட்டிட்டு நடிச்சிட்டு டிரெஸ்ஸிங் பத்தி பேசலாமா?.. விசித்ராவை விளாசிய பிக் பாஸ் பிரபலம்!..

அப்போது பிரதீப் ஆண்டனி அவர்கள் அங்கு சென்றால் அங்கு நாமினேட் ஆகாத இருவரை இங்கு அனுப்புங்க பிக்பாஸ் என கூறுகிறார். அதற்கு விசித்ரா எதற்கு அப்படி என கேட்க ஆம நீங்க அங்க போயிட்டா இங்க ரென்டு பேர் வேணும்ல..அப்டினு பிரதீப் கூற சண்டை ஆரம்பமாகியது.

விசித்ரா எங்களுக்கு சமமாக அங்கு போட்டியாளர்கள் இருக்காங்கலா என கேட்கிறார். பின் வீட்டின் கேப்டன் பிரதீப்பிடம் என்ன பேசுறீங்கனு உங்களுக்கு புரியுதா என கேட்கிறார். இவ்வாறாக இந்த ப்ரோமோ முடிவடைகிறது. நேற்று ஆடை அணிவது தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய விசித்ரா இன்று சண்டையில் இறங்கியுள்ளார். இது பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க:எதிர்நீச்சல் சீரியல்: ரசிகர்களை ஏமாற்றிய எதிர்நீச்சல்… ஆனா கதிருக்கு ஆப்பு வச்சது என்னமோ சந்தோஷம்தான்…

Continue Reading

More in Bigg Boss

To Top