×

யுவனின் BGM இசையில் தெறிக்கும் சக்ரா ட்ரைலர்...!

'ஆக்ஷன்' படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் படம் “சக்ரா”. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

 

விஷாலின் விஷால் ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இன்று சக்ரா படத்தின் ’ட்ரெய்லர் முன்னோட்டம்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விஷால்.

அதாவது  ”சக்ரா படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டத்திற்கு தயாராகுங்கள். இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது” என தெரிவித்தததால் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வெயிட்டான ட்ரீட்டாக சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரின் ஒரு பகுதியை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இதில் யுவன் ஷங்கர் ராஜாவின் வெறித்தனமான BGM நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


From around the web

Trending Videos

Tamilnadu News