×

படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்கள் – நடிகர் சிவக்குமார் செய்த உதவி !

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக உலகம் முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதையொட்டி தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகளும் மார்ச் 19 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இதனால் சினிமாவில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News