Connect with us

Bigg Boss

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷை வச்சு செய்த பிரபல நடிகர்!.. யாருன்னு பாருங்க!

வார வாரம் தியேட்டர்களில் கூல் சுரேஷ் அலப்பறை இல்லாமல் போரடித்து வந்த நிலையில், இனிமேல் மீண்டும் அந்த அலப்பறைகள் ஆரம்பித்து விடுமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இதற்கு மேல் முடியாது என கூல் சுரேஷ் நினைத்தாரா அல்லது இந்த வாரம் நீங்க போயிடுங்கன்னு பிக் பாஸ் டீம் சொன்னதா என தெரியவில்லை, பரணி போல சுவர் எல்லாம் ஏறி குதித்து எஸ்கேப் ஆக பிளான் போட்டார். ஆனால், அதன் பின்னரும் கீழே இறங்கி ஸ்போர்ட்டிவாக விளையாட ஆரம்பித்த நிலையில், மிட் வீக் எவிக்‌ஷனிலும் அவரது பெயர் சிக்காமல் அனன்யா ராவை தான் ராவோடு ராவாக வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

இதையும் படிங்க: உன்கிட்ட ஹைலைட்டே அதுதான்!.. அந்த ஏரியாவை நச்சின்னு காட்டும் ரம்யா பாண்டியன்…

இந்நிலையில், கூல் சுரேஷ் அல்லது நிக்சன் இருவரில் யார் இந்த வாரம் வெளியே போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிக்சனுக்கு இன்னும் சில வாரங்கள் அக்ரீமென்ட் உள்ளதா தெரியவில்லை. இந்த வாரம் கூல் சுரேஷை வீட்டுக்கு அனுப்பி விட்டார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கூல் சுரேஷ் நேரடியாக சிம்புவை போய் சந்திப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்டாக தனது நண்பர் சந்தானத்தை போய் சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: கமலுக்கு வாக்கு கொடுத்த சிம்பு!.. அதனால வால சுருட்டி வச்சிக்கிட்டு நடிப்பாராம்.. இதுதான் விஷயமா?!..

கூல் சுரேஷுக்கு மாலை எல்லாம் போட்டு வரவேற்ற சந்தானம், நீ எதுவும் பேச வேண்டாம். அப்புறம் கமெண்ட் போட்டு கழுவி ஊத்துவாங்க என பங்கமாக கலாய்த்து விட்டார். மேலும், இனிமேலாவது உன் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் என்றும் வாழ்த்தி அனுப்பி உள்ளார்.

 

 

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top