×

கொரோனா அச்சம் ; டாஸ்மாக்குகள் மூடப்படுமா? குடிமகன்கள் பீதி

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.
 

இந்தியாவில் நூற்றுக்கணக்கான பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்நோய் பரவி வருகிறது. எனவே, எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை வருகிற 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் வணிக வளாகங்கள், ஆலயங்கள் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக்கையும் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, டாஸ்மாக்குகள் மூடப்பட்டுவிடுமோ என்கிற கவலை குடிமகன்களுக்கு ஏற்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News