×

கண்ணா லட்டு திண்ண ஆசையா பட ஹீரோ மரணம்  – அதிர்ச்சியில் திரையுலகம் !

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் நடித்த சேதுராமன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

 

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் நடித்த சேதுராமன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

சென்னையில் பிரபல தோல் மருத்துவராக இருந்து வந்தவர் சேதுராமன். இவர் சந்தானத்தின் நண்பரும் கூட. இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை எடுத்து வந்தார்கள். எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவஆரம்ப காலத்தில் சந்தானத்துக்கு பல உதவிகள் செய்ததாக பல முறை அவரே சொல்லியுள்ளார்.

அந்த நட்பின் அடையாளமாக சந்தானம் தான் தயாரித்து நடித்த ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் சேதுவை ஹீரோவாக்கினார். அந்த படம் வெற்றி பெற்றாலும் சேதுவுக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அதன் பின்னரும் சந்தானத்தோடு சில படங்களில் நடித்தார். இந்நிலையில் நேற்று இரவு இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது வயது 36. இவரது மரணசெய்தி அறிந்த திரையுலகினர் மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News