×

கானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் - ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்!

எஸ்பிபியின் மறைவிற்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் போராடி உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

எஸ்.பிபியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது தமிழ துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,  

"திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்" என்று பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News