Categories: Cinema News latest news

உங்களை டைரக்ட் பண்ணுவேன்னு ஒருநாளும் நினைக்கல சார்!.. தனுஷ் அப்படி யார டைரக்ட் பண்றாரு தெரியுமா?..

நடிகர் தனுஷுக்கு சினிமாவில் நடிப்புன்னா என்னன்னு சொல்லிக் கொடுத்த இயக்குநரை கடைசியாக இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என தற்போது அந்த இயக்குநரின் போஸ்டரை வெளியிட்டு ட்வீட் போட்டிருக்கிறார்.

ராயன் படத்தில் இன்னும் எத்தனை இயக்குநர்கள் இருக்கின்றனர் என்றும் ஒவ்வொருத்தரும் நடிப்பு அரக்கர்களாக உள்ளனரே என்றும் ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு போயுள்ளனர். தனுஷ் இந்த படத்தை நடித்து இயக்குகிறார். காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 300 பேர் முன்னாடி அஜித் என் காலில் விழுந்தார்!.. சொல்லித்தான் ஆகணும்!.. அதிரவிட்ட நடிகர்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், அந்த படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்தது குறித்து போஸ்டர் வெளியிட்டு தனுஷ் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது அவரது ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: காமெடி நடிகரால் வீட்டை விட்டு ஓடிய நடிகர் திலகம்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!..

முன்னதாக ராயன் படத்தின் கதையை நான் எழுதவில்லை என்றும் அந்த படத்தில் நடிக்கிறேன் என தம்பி அறிவிக்க மாட்டான் என நினைத்து செல்வராகவனே அதிரடியாக ட்வீட் போட்டிருந்தார். இந்நிலையில், உங்களை ஒரு நாள் இயக்குவேன் என நினைக்கவில்லை சார் என அண்ணனாக இருந்தாலும் சினிமாவின் குரு என்பதால் மரியாதை அளித்து அவருக்கான போஸ்டரை தனுஷ் தற்ஓது வெளியிட்டு இருக்கிறார்.

இன்னும் படத்தில் யார் ஹீரோயின் என்பது குறித்து மட்டும் அதிகாரப்பூர்வமாக தனுஷ் வெளியிடவில்லை. விரைவில் அந்த அறிவிப்பும் போஸ்டருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M
Published by
Saranya M