ஓயாத பஞ்சாயத்து... தனுஷின் `ஜகமே தந்திரம்’ விவகாரத்தில் என்ன நடக்கிறது?

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெய்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்திருக்கும் நிலையில், ரிலீஸ் விவகாரத்தில் தனுஷுக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இங்கிலாந்தின் லண்டனில் முழுக்க முழுக்கப் படமாக்கப்பட்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்துக்கு அந்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் படமெடுக்கப்பட்டிருப்பதால் மானியமாக 16 கோடி கிடைக்க வேண்டியிருக்கிறதாம். தியேட்டர்களில் ரிலீஸானால்தான் மானியம் என்று இருந்த விதி, தற்போது கொரோனாவால் தளர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், தயாரிப்பாளர் தரப்பு படத்தை நெட்பிளிக்ஸுக்குப் பெரும் தொகைக்கு விற்றிருக்கிறது. இதனால், தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. படத்தைத் தியேட்டர்களில் வெளியிட அவர்கள் விரும்புகிறார்கள். இதனால், படத்தை ஒரே நாளில் நெட்பிளிக்ஸிலும் தியேட்டரிலும் வெளியிடலாம் என்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்னையில் இன்னும் ஒரு சில நாள்களில் தீர்வு கிடைக்கலாம் என்று படக்குழுவினர் நம்பிக்கையோடு பேசுகிறார்கள்.