Categories: Cinema News latest news

10 வருஷமா படமே ஓடல!.. ஜெயிலர் பார்த்துட்டு வயித்தெரிச்சல்.. ரஜினி சொன்ன நடிகர் யார்?

லால் சலாம் இசை வெளியீட்டு விழா நேற்று சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணன், அனந்திகா, செந்தில், தம்பி ராமைய்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ரஜினிகாந்த், கபில் தேவ் போன்ற பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

இந்தியில் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியான 83 படத்தைத் தொடர்ந்து தமிழிலும் பல கிரிக்கெட் படங்களை எடுக்க ஆரம்பித்தனர். அசோக் செல்வன், சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படத்தைத் தொடர்ந்து இந்த வாரம் லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட் போட்டியை வைத்து வெளியாகிறது. அடுத்து சம்மருக்கு நயன்தாராவின் டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாக காத்திருக்கிறது.

இதையும் படிங்க: எங்க அம்மா தினம் சாப்பாடு போட்டுட்டு அழுவாங்க!.. அதையெல்லாம் தாண்டி வரணும்.. மணிகண்டன் சொன்ன மேட்டர்!

லவ்வர்ஸ் டே மாதத்தில் கிரிக்கெட் படம் கை கொடுக்குமா? அல்லது மணிகண்டன், ஸ்ரீகெளரிபிரியா நடித்துள்ள லவ்வர் கை கொடுக்குமா என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.  சன் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்கு முன்னதாகவே ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நடந்த போதே விஜய் பற்றியும் காக்கா கழுகு பற்றியும் ரஜினிகாந்த் பேசிய அனைத்தும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஜெயிலர் பார்த்து விட்டு தனது நண்பர் ஒருவர் அந்த படம் 30 சதவீதம் ஹேப்பி, 70 சதவீதம் வயிறு எரியுதுன்னே சொன்னார். எனக்கு மட்டும் 10 வருஷமா எந்த படமுமே ஏன் ஓடல, உனக்கு மட்டும் நல்ல இயக்குநர்கள் எங்கிருந்து கிடைக்கிறாங்க எனக் கேட்டார். எவ்ளோ காசு வேணா தரேன் நெல்சன் எனக்கு ஒரு படம் பண்ண சொல்லு என்றார். அதெல்லாம் முடியாது. உனக்கு நடிக்க வராதுன்னு நான் சும்மா காமெடியா பேசினேன் என்றார்.

இதையும் படிங்க: அடுத்த விஜய்ன்னுலாம் கனவு காண கூடாது!.. சிவகார்த்திகேயனின் அயலான் இத்தனை கோடி நஷ்டமா?..

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் என மம்மூட்டி குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த முறை யாரை சொல்கிறார் என்கிற கண்டுபிடிப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. சிரஞ்சீவியை சொல்றாரா? அல்லது மோகன் பாபுவை சொல்றாரா? இருவர் படங்களுமே ஓடுவதில்லையே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மோகன் பாபு தான் ரஜினியின் நெருங்கிய நண்பர் அவர் தான் சொல்லியிருப்பார் என்றும் உறுதி செய்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M