×

நயன்தாரா ஆரம்ப காலத்தில் சென்னைக்கு எப்படி வந்தாங்க தெரியுமா?

ஐயா படத்திற்காக நயன்தாரா சென்னைக்கு எப்படி வந்துள்ளார் பாருங்க

 

தென்னிந்திய சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து  அஜித், விஜய் , ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ்  என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் கேரளாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பிளானியாக பணியாற்றியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற இந்த இடத்தை எளிதில் அடைந்திடவில்லை பட தோல்விகள் முதல் தனிப்பட்ட பிரச்சனை வரை பல இன்னல்களை தாண்டி வெற்றி அடைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளா சென்றார். ஆனால், நயன்தாரா ஐயா படத்திற்காக தனது அப்பா , அம்மாவுடன் அரசு பேருந்து ஒன்றில் கேரளாவில் இருந்து கிளம்பி வந்து கோயம்பேடு இறங்கி பின்னர் பிஆர்ஓ ஜான்சன் உதவியுடன் வடபழனியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அப்படி இருந்த நயன் இப்போது தனது முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பாராட்டக்கூடியது.

From around the web

Trending Videos

Tamilnadu News