×

சிவகார்த்திகேயனும் லிஸ்ட்ல வந்தாச்சு!... அமேசான் பிரைமில் வெளியாகும் ‘டாக்டர்’.. 

 
சிவகார்த்திகேயனும் லிஸ்ட்ல வந்தாச்சு!... அமேசான் பிரைமில் வெளியாகும் ‘டாக்டர்’..

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தனது சூரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டு துவங்கி வைத்தவர் நடிகர் சூர்யா. அதன்பின் பல தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களை அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஏனெனில் தியேட்டர்களுக்கு அதிகம் ரசிகர்கள் வராதது, 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, இரவு நேர காட்சி ரத்து என அரசு தரப்பில் பல கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் எதற்கு ரிஸ்க் என ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் ஓடிடி தளத்தில் தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை விற்பனை செய்து வருகின்றனர்.விரைவில் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் மே மாதம் வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ரூ.42 கோடிக்கு இப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாகவும், இன்னும் இரண்டொரு நாளில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News