×

"இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே" - ஆபாச நடிகை காட்டம்!

ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர்  திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.

 

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . ஏன்? எதற்காக என்று குழம்பிப்போன அனைவருக்கும் விளக்கமளித்துள்ள ரெனீ கிரேசி, " நான் இந்த துறையில் நுழைந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள்  நிறைய பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த இரண்டு மாத முடிவில் நான் சம்பாதித்த பணம் ஆறு இலக்கங்களை தொட்டுவிடும். இந்தத் தொழில் மூலம் எனக்கு பணம் கிடைப்பது எனக்கு பிடித்திருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பணம் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

அடுத்தவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுவதை எண்ணி நான் வருத்தப்பட்டேன். நான் இந்த வருமான பிரச்னையில் இருந்த மீள எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால், என் கனவு சுக்கு நூறாகிவிட்டது. இதையெல்லாம் தாண்டி நான் கனவில் கூட நினைத்திராத அளவிற்கு என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளது. யார் என்னை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. தற்போது நான் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். அதில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது" என சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது தளத்திற்கு வீடியோக்களை பார்க்க வரும் இந்தியர்கள் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரெனீ  "இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... உன்னை வரவேற்கவில்லை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News