×

இன்னும் கொஞ்சம் நாளுக்கு முத்தம் கொடுக்காதீங்க – அரசாங்கம் அறிவுரை !

கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் சந்தித்துக் கொள்ளும்போது முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் சந்தித்துக் கொள்ளும்போது முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவிலன் வூஹான் நகரத்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரொனா வைரஸ் இப்போது உலகம் எங்கும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில்,இந்த வைரஸ் தாக்குதலால் 2,888 பேர் உயிரிழந்துள்ளனர். 79,822 பேருக்கு மேல் நோய் தாக்கப்பட்டுள்ளனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இப்போது பிரான்சிலும் அதிக நபர்களைத் தாக்கியுள்ளது. அங்கு 100 பேருக்கு மேல் இவ்வைரஸ் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சில ஆலோசனைகள அந்நாட்டு சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

அதில் ‘மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதை தவிருங்கள். மேலும் சந்திப்பின் போது மரியாதை நிமித்தமாக கைகுலுக்குதல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றை தவிருங்கள்’ என சொல்லியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News